Friday, July 21, 2017

காயல் அடை ஊறுகாய்

காயல் அடை ஊறுகாய்: Kayal Adai Pickle

தேவையான பொருட்கள்:

எலுமிச்சைப்பழம் – 10

Lemon 10

கல் உப்பு – தேவைக்கேற்ப

Coarse Salt – As required

தேங்காய் தண்ணீர் – 1 டம்ளர்

Coconut Water – 1 Glass

செய்முறை:

எலுமிச்சைப்பழத்தை துண்டுகளாக்கி விடாமல் தொடுப்பு வைத்து நான்காக கீறிக்கொள்ளவும்.

அதற்குள் கல் உப்பை திணித்து விரல்களால் அழுத்தி பழத்தை சற்று இறுக்கி ஒரு ப்ளாஸ்டிக் அல்லது கண்ணாடி ஜாருக்குள் வைக்கவும்.

இதை தினமும் நன்றாக வெயிலில் வைத்து சில மணிநேரங்கள் கழித்து குலுக்கி விடவும்.

மூன்று நாட்களுக்குப் பிறகு எலுமிச்சை நிறம் மாறத்துவங்கி விடும்.

ஒவ்வொரு நாளும் வெயிலில் வைக்கும் போது சிறிதளவு தேங்காய் தண்ணீரை சேர்த்து குலுக்கி விடவும்.

இந்த கட்டத்தில் எக்காரணத்தைக் கொண்டும் கைவிரல் பட்டு விடக்கூடாது. காரணம் கைவிரல் பட்டால் பூசணம்(Fungus) பிடித்து விடும்.

தொடர்ந்து பதினைந்து நாட்கள் இப்படி வெயில் வைத்து எடுக்கும் போது எலுமிச்சை நன்கு வெந்து பொன் நிறத்தில் கெட்டியான பாகுடன் காணப்படும்.

காயலின் கத்திரிக்காய் மாங்காய் பருப்பு, சம்பல் ஆகியவற்றுடன் சேர்த்துக்கொள்வதோடு, நெய்ச்சோறு, கிச்சடி, பழைய சாதம், இடியப்ப பிரியாணி போன்றவற்றுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

தாளித்த உறப்பு அடை ஊறுகாய்:

முதலில் அடை ஊறுகாயை கொட்டை நீக்கி இதழ்களை பிய்த்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் ½ லிட்டர் ரீஃபைண்ட் ஆயில் விட்டு நன்றாக சூடாக்கிய பின் அதில் கடுகு போடவும்.

கடுகு வெடித்தவுடன் வெந்தயமும் பத்து பல் தோலுடன் தட்டிய பூண்டும் சேர்த்து பொறிக்கவும்

தாளிப்பு முறுகியதும் அடுப்பை அனைத்துவிட்டு ஆறிய பின் அத்தோடு காயல் கீரைப்பொடி நான்கு தேகரண்டி சேர்த்து நன்கு கிளறி விட்டு அடை ஊறுகாயுடன் கலந்து கிளறி விடவும். (எண்ணெய் சூடாக இருக்கும் போது கீரைப்பொடி சேர்த்தால் அது கருகிவிடும். சூட்டுடன் தாளிப்பை ஊறுகாயில் ஊற்றினால் கசப்பு ஏற்பட்டு விடும்). இந்த ஊறுகாய் நல்ல மணமுடன் கூடிய சுவையோடு கைபடாமல் இருந்தால் நீண்டகாலம் வைத்து உபயோகிக்கலாம்.

-Rabiya Rafeeq.
Kayalpatnam samayal

No comments:

Post a Comment