Wednesday, October 28, 2020

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 10 ]*

                *⛱️ இறுதி பாகம் ⛱️*

*☄️உபரி தொழுகைகள்☄️*

*🏮🍂கடமையல்லாத நாமாக விரும்பித் தொழும் உபரியான தொழுகைகளும் சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் ஓர் தகுதியாகும். இதைத் தெரிவிக்கும் சான்றுகள் கணக்கற்ற வகையில் இருந்தாலும் பிலால் (ரலி) அவர்களின் நிகழ்விலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.*

_*🍃(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.*_

_*அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளு செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகை யை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
              *அபூஹூரைரா (ரலி),*
    
             *📚 முஸ்லிம் 4854 📚*

*🏮🍂சொர்க்கம் செல்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எதையெல்லாம் சொர்க்கவாசிகளுக்குரிய தகுதிகளாக அல்லாஹ், ரசூல் குறிப்பிடுகிறார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொண்டோம். இந்த அடிப்படையில் நன்மைகளைச் செய்து, நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
                    ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment