Wednesday, October 28, 2020

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 9

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 09 ]*

*☄️நோயாளியை*
               *நலம் விசாரித்தல்*

*🏮🍂நோய்வாய்ப்பட்டவர்களை நலம் விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும்.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.*_

*🎙️அறிவிப்பவர் :*
             *ஸவ்பான் (ரலி),*

               *📚 முஸ்லிம் 5017 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️நல்லறங்களின்*
                   *சங்கமிப்பு☄️*

*🏮🍂ஒரு அடியார் நல்லறங்கள் சங்கமிக்கும் சங்கமமாக இருப்பார் எனில் அவர் சொல்லும் தகுதியைச் சந்தேகமறப் பெறுகிறார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.*

_அபூபக்கர் ரலி அவர்கள் தொடர்புடைய நிகழ்வில் நபிகள் நாயகம் கூறிய இத்தகவலை பின்வரும் நிகழ்வில் அறிந்து கொள்கிறோம்._

_*🍃(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
            *அபூஹூரைரா (ரலி),*

           *📚 முஸ்லிம் 1865 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment