Wednesday, October 28, 2020

ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் மரணம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *👖👖👖இன்று நாம் பார்க்க இருப்பது இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் மரணம்: மருத்துவர்கள் எச்சரிக்கை👖👖👖* 


 *✍️✍️✍️மிக இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் மரண விளிம்பு வரை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நாகரீக உடைகளில் ஆண், பெண் இருபாலர் மத்தியில் பிரபலமானது ஜீன்ஸ் பேண்ட். விதவிதமான டிசைன்கள், கலர்கள் என அதை அணிந்தாலே ஒரு ஸ்மார்ட் லுக் நம்மில் தோன்றும்.* 
 *ஆனால் மிக இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்த டெல்லி தொழிலதிபர் ஒருவர் மரணப்படுக்கை வரை சென்றுள்ளார்.டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சவுரப் சர்மா. இவர் கடந்த 12-ம் தேதி ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு மிகவும் குறைந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️பின்னர் சவுரப் சர்மாவிடம் உடல் நலம் பாதிப்பதற்கு முன் என்ன நடந்தது என மருத்துவர்கள் கேட்ட போது, டெல்லியில் இருந்து புதிய காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்ததாகவும், தொடர்ந்து 8 மணி நேரம் காரில் எங்கேயும் நிறுத்தாமல் சென்றாமல் காலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ் பேண்டால் கால் முட்டியின் கீழ் பகுதி மெதுவாக சுருங்குவதை உணர்ந்துள்ளார். அதன்பின் அதைப்பற்றி எதையும் சிந்திக்காமல் வலி எடுத்த இடத்தில் மருந்துகளை தடவிவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டேன். ஆனால், அங்கு சென்ற சில நிமிடங்களில், சுய நினைவை இழந்து விழுந்ததாக கூறியுள்ளார்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மிக இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் அவர் உடலில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அதன் விளைவாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் எப்போதும் நாம் உடையணியும் போது இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *👖👖👖நவநாகரீக🧣🧣🧣 ஆடைகளால் ஏற்படும் 🧣🧣🧣ஆபத்துகள்!…👖👖👖* 


 *✍️✍️✍️இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர். ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும். உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம். ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது. ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது உடலை இருக்கிப் பிடித்து மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா’ என்ற பாதிப்பை உருவாக்கிவிடும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்குவதால் பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் கடுமையான கால் வலி ஏற்படும் என்கின்றனர். ஜீரணம் பாதிக்கும் நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஆண்மைக் குறைபாடு பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம்.. இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்’ என்று சுவீடனில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதை தொடர்ந்து சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி’ என்ற ஒரு கொள்கையை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள்.ஆண்களின் இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது ஆண்களின் விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருக்கமான உடை அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆரோக்கியமான உடை ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது.  இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஸ்கின் பிட்’ ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்’ என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டும். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற இறுக்கமான ஆடைகளை விட்டு விழிப்புணர்வோடு இருப்போம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment