Wednesday, October 28, 2020

பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய விழிப்புணர்வு

*♻️♻️♻️_இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்_♻️♻️♻️*

 *📚📚📚இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்📚📚📚* 


 *🛑🛑🛑இன்று நாம் பார்க்க இருப்பது பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய விழிப்புணர்வு அறிந்து கொள்வோம்🛑🛑🛑* 


 *✍️✍️✍️பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக உபயோகித்தல்* 
 **பூச்சிக்கொல்லிகள் வாங்கும்போது* *பூச்சிக்கொல்லி மருந்துகளை* *வைக்கும்போது பூச்சிக்கொல்லி மருந்துகளை* *கையாளும்போது பூச்சிக்கொல்லி* *கரைசலை தயாரிக்கும்போது* 
 *உபகரணங்களைத் தேர்வு செய்தல்* 
 *பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது கவனிக்கவேண்டியவை* 
 *பூச்சிமருந்து தெளித்த பிறகு செய்யகூடியவை✍️✍️✍️** 


 *🟣பூச்சிக்கொல்லிகள் வாங்கும்போது🟣* 

 *♻️செய்யவேண்டியவை♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிக்கொல்லி மற்றும் உயிர்ப்பூச்சிக்கொல்லி மருந்துகளை* *அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்* 
 *ஒருமுறை ஒரு குறிப்பிட்ட நில அளவுக்கு உபயோகிக்கத் தேவையான* *பூச்சிக்கொல்லி மருந்தினை மட்டுமே வாங்க வேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்து அட்டை அல்லது பாட்டிலின் மீதுள்ள அப்பூச்சிக்கொல்லி அங்கீகரிக்கப்பட்டதற்கான விவரத்தினைப் பார்க்கவேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி செய்த பேட்ச் எண், பதிவு எண், உற்பத்தி செய்த நாள், உபயோகிப்பதற்கான* *காலக்கெடு போன்றவற்றை பார்க்கவும் பூச்சிக்கொல்லி மருந்து நன்றாக பேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தல் அவசியம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*


 *😕🙁செய்யக்கூடாதவை🤩🤩*


 *✍️✍️✍️அங்கீகரிக்கப்படாத விற்பனையாளரிடமிருந்து பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது* 
 *ஒரு பருவத்திற்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வாங்கக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் அல்லது பாக்கெட்டில் அங்கீகரிக்கப்பட்ட லேபிள் இல்லாதவற்றை வாங்கக்கூடாது*  *உபயோகிப்பதற்கான காலக்கெடு முடிந்த பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மருந்து இருக்கும் பாட்டிலில் கசிவு அல்லது அவற்றின் சீல் உடைக்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்கக்கூடாது✍️✍️✍️* 


 *👹👹பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும்போது👹👹*

 *🥎செய்யவேண்டியவை🥎*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிற்கு வெளியே வைக்கவேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை அவை வாங்கிய பாட்டிலிலேயோ அல்லது பையிலேயோ வைக்கவேண்டும்.* 
 *பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை தனிதனியே வைக்க வேண்டும்.* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை வைத்திருக்கும்* *இடத்தில் அபாயத்தினை குறித்து எழுதி வைக்கவேண்டும்* 
 *குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு எட்டாத வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கவேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை சூரியவெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* ..


 *🙁🙁செய்யக்கூடாதவை🤩🤩* 


 *✍️✍️✍️பூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிலோ அல்லது வீட்டின் சுற்றுபுறத்திலோ வைக்கக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை அவைகளுடையது அல்லாது வேறு பாட்டில்களிலோ அல்லது பைகளிலோ மாற்றி வைக்கக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வைக்க கூடாது.* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை சூரிய வெயில் மற்றும் மழையில் படுமாறு வைக்கக்கூடாது✍️✍️✍️* 


 *👹👹பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும்போது👹👹* 


 *🥎செய்யவேண்டியவை🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிக்கொல்லி மருந்துகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லும் போது தனியாக கொண்டு செல்ல வேண்டும்* 
 *வயல்களில் தெளிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக கொண்டு செல்லும்போது* *கவனமாக கொண்டு செல்லவேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🙁😕செய்யக்கூடாதவை🤩🤩* 


 *✍️✍️✍️எப்பொழுதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உணவு, தீவனம் மற்றும் இதர உண்ணும் பொருட்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக எடுத்துச்செல்லும்போது தோளிலோ, தலையிலோ அல்லது முதுகிலோ சுமந்து செல்லக்கூடாது✍️✍️✍️* 


 *👹👹பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்கும்போது👹👹* 


 *🥎செய்யவேண்டியவை🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எப்பொழுதும் சுத்தமான தண்ணீரையே உபயோகிக்கவேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி கரைசலை தெளிக்கும்போது பாதுகாப்பு உடைகளான கை உறை, முகக்கவசம், தொப்பி, கோட், முழுக்கால் பான்ட் மற்றும் இதர உடைகளை உடல் முழுவதும் மூடிக்கொள்ளுமாறு அணிந்து கொள்ளவேண்டும்* 
 *தெளிக்கும் போது பூச்சிக்கொல்லி மருந்து உங்கள் கண், மூக்கு, காது, கை போன்ற உறுப்புகளின் மேல் படாதவாரு பாதுகாத்து கொள்ளவும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில் அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து அதன்படி உபயோகிக்கத் தவறக்கூடாது* 
 *தேவைக்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை தயாரிக்கவேண்டும்*  *குருணைவடிவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை அப்படியே உபயோகிக்க வேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி கரைசலை தெளிப்பானில் ஊற்றும் போது கீழே சிந்தக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி, பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிக்கவேண்டும்* 
 *உங்கள் உடல்நலத்தினை பாதிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🙁😕செய்யக்கூடாதவை🤩🤩* 


 *✍️✍️✍️சேறு கலந்த அல்லது தேங்கிய தண்ணீரை உபயோகிக்கக்கூடாது* *பாதுகாப்பு உடைகளை அணியாமல் பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்க கூடாது.* 
 *உடம்பின் பாகங்களில் பூச்சிக்கொல்லி படுவதை தவிர்க்கவேண்டும்.* 
 *பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில் அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கத் தவறக்கூடாது.* 
 *24 மணிநேரத்திற்கு முன்பு தயாரித்த பூச்சிக்கொல்லி கரைசலை உபயோகிக்கக்கூடாது* *குறுணை பூச்சிக்கொல்லியை தண்ணீரில் கலந்து தெளிக்கக் கூடாது* 
 *பூச்சிகொல்லி தெளிப்பானை நுகரக் கூடாது* 
 *தேவையான அளவுக்கு மேல் பூச்சிகொல்லியை உபயோகிக்கக் கூடாது.* *அவ்வாரு செய்வது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்* 
 *பூச்சிகொல்லிகளை கையாளும் போது சாப்பிடுவது, குடிப்பது, புகைப்பிடிப்பது, பான்பராக் மெல்லுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது✍️✍️✍️* 


 *🛑🛑🛑உபகரணங்களைத் தேர்வு செய்தல்🛑🛑🛑* 


 *🥎செய்யவேண்டியவை🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான உபகரணங்களைத் தேர்வு செய்யவேண்டும்* 
 *பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான அளவு துவாரமுடைய உபகரணத்தை தேர்வு செய்யவேண்டும்* 
 *களைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் தனித்தனி தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🙁😕செய்யக்கூடாதவை🤩🤩* 


 *✍️✍️✍️பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க, கசியும் அல்லது குறையுடைய உபகரணங்களைத் தேர்வு செய்யக்கூடாது* 
 *கோளாறுடைய அல்லது பரிந்துரைக்கப்படாத துவாரம் கொண்ட உபகரணங்களை உபயோகிக்கக்கூடாது.* *மேலும் அடைத்துள்ள உபகரணத்தின் மருந்து தெளிக்கும் துவாரத்தினை சுத்தம் செய்ய வாயினால் ஊதக்கூடாது. மாறாக பல்துலக்கும் பிரஷ்ஷினை தெளிப்பானுடன் கட்டிக்கொண்டு துவாரத்தினை சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்* 
 *களைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஒரே தெளிப்பானை உபயோகிக்ககூடாது✍️✍️✍️* 


 *👹👹👹பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது கவனிக்கவேண்டியவை👹👹👹* 


 *🥎செய்யவேண்டியவை🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்கவேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான சூழல் உள்ள நாட்களில் பயிர்களுக்கு தெளிக்கவேண்டும்* 
 *பொதுவாக வெயில் அடிக்கும் நாட்களில் பூச்சிக்கொல்லி அடிக்கவேண்டும்* 
 *பரிந்துரைக்கப்பட்ட தெளிப்பானை தனித்தனியே ஒவ்வொரு கரைசலுக்கும் உபயோகிக்கவேண்டும்* 
 *காற்றடிக்கும் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை சோப்பு கொண்டு சுத்தமான நீரினால் கழுவவும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தவுடன் இதர வேலையாட்கள் மற்றும் விலங்குகளை வயலுக்குள் அனுமதிக்கக்கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥎செய்யக்கூடாதவை🥎* 

 *✍️✍️✍️பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக்கூடாது* *பூச்சிக்கொல்லி மருந்தினை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் அதிகமாக உள்ள நாட்களிலும் அதிகம் காற்றடிக்கும் நாட்களிலும் தெளிக்கக்கூடாது* 
 *மழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்த பின்பும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது* 
 *பேட்டரியின் மூலம் இயங்கும் ULV தெளிப்பானில் அடர்த்தி மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை உபயோகிக்கக்கூடாது* *காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை அடிக்கக்கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை நன்கு கழுவிய பின்பும் வீட்டு உபயோகத்திற்கு உபயோகிக்கக்கூடாது* *பாதுகாப்பு கவச உடைகளை அணியாமல், பூச்சிக்கொல்லி மருந்தடித்த வயலுக்குள் செல்லக்கூடாது✍️✍️✍️* 


 *👹👹👹பூச்சிமருந்து தெளித்த பிறகு செய்யகூடியவை👹👹👹*


 *🥎செய்யவேண்டியவை🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை தனியான யாரும் உபயோகப்படுத்தாத இடத்தில் கொட்டிவிட வேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்தினை உபயோகப்படுத்தியபின்பு அது இருந்த பாட்டில்களை கல் அல்லது குச்சி கொண்டு ஒடுக்கி நீர்நிலைகள் இல்லாத இடத்தில் புதைத்துவிட வேண்டும்* 
 *பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு முகம் மற்றும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிய பின்பே உணவருந்த செல்லவேண்டும்* 
 *விஷம் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால் முதலுதவி அளித்தபின்பு மருத்துவரிடன் நோயாளியை அழைத்துச்செல்ல வேண்டும். கூடவே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலையும் எடுத்துச்செல்ல வேண்டும.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *😕😕செய்யக்கூடாதவை🤩🤩* 


 *✍️✍️✍️பூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை குளத்திலோ அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ கொட்டக்கூடாது* 
 *காலியான பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை மற்ற பொருட்களை சேமித்துவைக்க உபயோகப்படுத்தக் கூடாது* 
 *பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு குளிக்காமலோ அல்லது துணிகளைத் துவைக்காமலோ சாப்பிடச் செல்லக்கூடாது* 
 *விஷம் தாக்கிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லத்தயங்கக்கூடாது. ஏனெனில், விஷம் தாக்கியவர் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்✍️✍️✍️* 


 *🌶️🍆🥕🧄🍠🥝🥒🥑உண்ணும் காய்கறிகளில் பூச்சி மருந்தை அடிப்பதால் ஏற்படும் விளைவுகள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமா?.🌶️🍆🥕🧄🍠🥝🥒🥑.*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிகொல்லி மருந்தால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன ஏன் இதை அதிகம் பயன்படுகிறார்கள்.. வாங்க பார்க்கலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️பூச்சிக் கொல்லிகளில் நிறைய நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்கள் உள்ளன. பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க இதை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பூச்சிக் கொல்லிகளின் தீவிரம் மனிதர்களையும் விடுவதில்லை. அவர்களுக்கும் நிறைய உடல் நல பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது.✍️✍️✍️* 


 *👹பூச்சிக் கொல்லி என்றால் என்ன❓👹* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூச்சிக் கொல்லிகளில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பூச்சிகளை விரட்ட, அழிக்க மற்றும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் இது பூச்சிகளை அழிப்பதோடு தேவையற்ற களைகளை அழிக்கவும், பூஞ்சைகளை அகற்றவும், மைக்ரோ உயிரினங்களை அழிக்கவும், எலிகள், பறவைகள் போன்றவற்றை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தீவிரம் பூச்சிகளை மட்டுமல்ல அதை அடிக்கும் மனிதர்களையும் தாக்குகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. வனவியல் மற்றும் உள்நாட்டு பூச்சி கட்டுப்பாடு வாரியத்தின் படி ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள், மரப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகளும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள். அதே மாதிரி பார்க், விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. பூங்கா போன்றவற்றில் உணவுகளை கொண்டு சென்று சாப்பிடுவது கூட அபாயமானது என்கிறார்கள்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நோய்களை தடுக்கும் பூச்சிக் கொல்லிகள் இதைத் தவிர மலேரியா, டெங்கு போன்று கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாள்பட்ட உடல் நல பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளின் தீவிரம் மனிதர்களுக்கு நரம்புக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. சர்வதேச சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 13 - 19 வயதிலான குழந்தைகளுக்கு விவசாய நிலங்களை சுற்றி இருப்பவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️மூளையில் ஏற்படும் பாதிப்புகள் மனச் சோர்வு நிறைய ஆராய்ச்சிகளின் படி பூச்சிக் கொல்லி மருந்துகள் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. பிரான்சில் 1998-2000 க்கு இடையில் செய்யப்பட்ட ஆராய்ச்சி படி பார்த்தால் 567 விவசாயிகளில், 83 விவசாயிகள் மனச்சோர்வின் அறிகுறிகளைப் பதிவு செய்துள்ளனர் என்று ரிப்போர்ட் கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் கருத்துப் படி மனச் சோர்விற்கு இது 4 வது இடமாக உள்ளது என்று கூறுகின்றது. இந்த மனச் சோர்வு ஒருவரின் மன, உடல் மற்றும் சமூக செயல்பாடுகளை பாதிப்பதோடு இறுதியில் அறிவாற்றல் செயலிழப்பை ஏற்படுத்துகிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆய்வுகள் 21000 பூச்சிக்கொல்லி விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் படி பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தியவர்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை உட்கொண்டவர்கள் தீவிர மனச் சோர்வை கொண்டவர்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இளைஞர்களின் மூளை பாதிப்பு தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,குளோர்பைரிஃபோஸின் வெளிப்பாடு காரணமாக 20 குழந்தைகளின் பெருமூளைப் புறணி தாயின் வயிற்றிலயே பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை பயிர்கள், கட்டிடங்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு வெளியிடப்பட்ட ஆய்வு பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு மன நல கோளாறுகள், மன இறுக்கம், கவனக் குறைவு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளனர்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உணர்வுகள் மற்றும் அசைவுகளில் பாதிப்பு மற்றொரு ஆய்வில் விவசாயிகளின் நரம்பியல் பாதிப்பதோடு அவர்களின் உணர்திறனும் பாதிப்படைந்து உள்ளதை தெரிவித்து உள்ளது.* 
 *பூச்சிக் கொல்லி மருந்துகளால் பர்கின்சன் நோய் வருகிறது. விவசாய பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, அங்குள்ள தண்ணீரில் மருந்து கலப்பு இவற்றால் பர்கின்சன் நோய் ஏற்படுகிறது.* 
 *மற்ற உடல் பாகங்கள் இந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் மூளையை மட்டுமல்ல மற்ற உடல் பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நுரையீரல் செயலிழப்பு, கடுமையான கல்லீரல் பாதிப்பு, பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியை முடக்குதல், ஒவ்வாமை, கண் மற்றும் சரும எரிச்சல், வாந்தி, தலைவலி, குமட்டல் மற்றும் பலவீனம் போன்ற ஏராளமான பாதிப்புகளையும் ஏற்படுத்திச் செல்கிறது.* 
 *தடுப்பு முறைகள் இயற்கை முறை விவசாயத்தை பின்பற்றலாம் காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை உரங்களை கொண்டு அறுவடை செய்து பயன்படுத்தலாம். வணிக ரீதியான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை தவிருங்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கை மற்றும் கால்களை நன்றாக அலம்பி விட்டு வரவும். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு பூச்சிக் கொல்லி பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️இந்த செயற்கை உரங்கள் விவசாய நிலங்களை பாதிப்பதோடு சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கிறது. எனவே மக்களுக்கும், இயற்கைக்கும் தீங்கு விளைவிக்காத வழிகளை கையாளுவதே சிறந்தது. பயிர் சுழற்சி முறைகள் பல்வகைப்பட்ட நடவு முறைகள் மக்கும் பூச்சி உரங்கள் பூச்சிகளை பிடிக்க பொறி தாவர முறைகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கைக்கும் நமக்கும் தீங்கு விளைவிக்காத முறைகளே நல்லது. அதையே பின்பற்றி பயன் பெறுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்✍️✍️✍️.* 


 *👹👹👹கர்ப்ப காலத்தில் பூச்சிக் கொல்லிகளின் பாதிப்பு👹👹👹*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒரு பூச்சி (தீங்குதரும் பூச்சிகள், பிற உயிர்கள், கிருமிகள் மற்றும் மனித செயல்பாடுகளுக்கு இடர் தரும் உயிரிகள்) அல்லது களையைத் தடுக்க, விலக்க அல்லது அவற்றல் ஏற்படும் சிதைவைக் குறைக்க பயன்படும் ஒரு பொருள் அல்லது பொருட்கலவையே பூச்சிக்கொல்லி எனப்படும். இதில் பூச்சிகொல்லி, கொறிணிக்கொல்லி (rodenticides), களைக்கொல்லி, காளான்கொல்லி, புகைமி (fumigants) போன்றவை அடங்கும். பூச்சிக்கொல்லிகள் வேதியற் பொருட்கள் அல்லது உயிரியல் பொருட்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலேரியா, டெங்கு போன்ற பெரும் பரப்பிகளால் பரவும் நோய்களுக்கு அல்லது பரப்பிகளால் ஏற்படும் நோயெழுச்சிகளின் போது வேதியற் பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதே முதற்கட்ட நடவடிக்கையாகும். அவற்றை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் மனிதர்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் நீடித்தப் பாதிப்புகளை அவை ஏற்படுத்தும். ஆர்கனோகுளோரின்கள் (டிடிடி, டய்ல்டிரின்), ஆர்கனோபாஸ்பேட்டுகள் (மாலத்தியான், கிளைபோசேட்), கார்பமேட்டுகள் (அல்டிகார்ப்), பைரித்ராய்டுகள் (பெர்மெத்ரின்), டிரயசைன்கள், மற்றும் நியோநிக்கோட்டினாய்டுகள் ஆகியவை பொதுவான வேதியல் பூச்சிக்கொல்லிகள் ஆகும். சரியாகக் கையாளாவிடில் இயற்கை வேதிப்பொருட்கள் உட்பட அனைத்து வேதிப்பொருட்களும் ஆபத்து விளைவிப்பவையே ஆகும். பல வேதியற் பொருட்களைப் பயன் படுத்துவதை அரசு தடை செய்துள்ளது. சிலவற்றை முறைப்படுத்தியுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️கர்ப்ப காலத்தில் சிலவகை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்புகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் உள்ளானால் கரு அல்லது சிசு, பிறவிக் கோளாறுகளால் பாதிக்கப்படும். ஆகவே, பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆபத்தான பொருள்களின் (கன உலோகம் அல்லது பூச்சிக்கொல்லிகள்) பாதிப்பு ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்✍️✍️✍️.* 


 *👹👹👹பூச்சுக்கொல்லி பாதிப்புக்கு கர்ப்பிணிப் பெண் எவ்வாறு உள்ளாகிறார்❓👹👹👹* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கர்ப்பிணிப் பெண் பலவகைகளில் பூச்சுக்கொல்லிகளினால் பாதிப்புக்கு உள்ளாகலாம்:* 
 *சுவாசிக்கும் போது பூச்சுக்கொல்லியை உள்வாங்கலாம். பூச்சுக்கொல்லி தெளிப்பால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்ளலாம். தோல் வழியாக அவற்றை கிரகிக்கலாம். அன்றாடக வாழ்வின் ஒரு பகுதியாக விளங்கும் பூச்சுக்கொல்லிகளில் அடங்குபவை:* 
 *காற்றும் நீரும்- ஓரிடத்தில் தெளிக்கப்படும் பூச்சுக்கொல்லிகளைக்காற்று இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லும். வெளியில் பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லிகளின் சிறு பகுதிகள் உணவு மற்றும் குடிநீரில் கலக்கலாம். உணவு* *(பயிர்களை பாதுகாக்கத் தெளிக்கப்படும் பூச்சிகொல்லிகள்) பயிர்களுக்கு அருகில் வாழும் கர்ப்பிணிகள் பூங்கா போன்ற பொது இடங்களில் உள்ல புற்களின் மேல் பூச்சுக்கொல்லிகள் தெளிக்கப்படும்.* *வளர்ப்புப் பிராணிகளுக்கான பூச்சி எதிர்ப்பு ஷாம்புகள் கொறித்துண்ணிகளை கொல்ல பயன்படுத்தப்படும்* *நஞ்சு சுத்திகரிக்கும் பொருட்கள். கர்ப்ப காலத்தில் பூச்சிக்கொல்லிகள் ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்ன?*
 *பயிர்கள் மீது தெளிக்கப்படும் அதிக அளவிலான பூச்சி மருந்துகளால் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்குப் பாதிப்புகள் உண்டாகும். அவற்றால் ஏற்படும் பாதிப்புகள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️:* 


 *✍️✍️✍️பிறப்புக் குறைபாடுகள்: முதல் மும்மாதத்தில்* *குழந்தையின் நரம்பு மண்டலம் வெகுவேகமாக வளர்ச்சியுறும். ஆகவே நச்சுப் பொருட்கள்* *ஆரம்ப கால கட்டத்தில் அதிகத் தீங்கு விளைவிப்பன ஆகும்.* 
 *பிற்காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் கல்விப்பிரச்சினைகள்குறை பிறப்பு எடை (2500 கிராம்களுக்கும் குறைவு)* 
 *கர்ப்பச்சிதைவு (20 வாரங்களுக்கு உள்ளாகக் கலைதல்) குறைப்பிரசவம் (37 வாரங்களுக்குக் குறைவாக)* 
 *குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சி அடையும் முதல் மும்மாதத்தில் வீட்டில் அல்லது தோட்டத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்த முறை✍️✍️✍️.*


 *👹கர்ப்பிணிகளுக்குப் பூச்சிக்கொல்லி பாதிப்பை குறைக்க வழி:👹* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உணவுக்கு முன் கைகழுவுதல் பழங்களையும்* *காய்கறிகளையும் ஓடும் நீரில் தேய்த்துக் கழுவுதல்பழம் அல்லது* *காய்கறியின் தோல் அகற்றல் இயற்கை முறையிலான உணவுகள்* *(பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் விளைந்தவை)* 
 *சேமித்து வைக்காத பருவகால பழங்கள்/காய்கறிகள் உண்ணுதல்* 
 *கொழுப்பகற்றிய இறைச்சி, தோல் அகற்றிய கோழி/மீன் உணவுகள்* 
 *பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படும் வயல் பகுதிகளுக்குச் செல்லாமை* 
 *வீட்டுக்குள் பூச்சிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது கைக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️:* 


 *✍️✍️✍️வேதியற் பொருட்களுக்குப் பதிலாக எலிப்பொறி, ஒட்டுப்பொறி போன்றவைகளை பயன்படுத்தலாம் (சிறு குழந்தைகள் நடமாடும் இடங்களில் இப்பொறிகளை வைக்கக் கூடாது)* 
 *உங்கள் வீட்டில் பூச்சிக்கொல்லிகளை வேறொருவரை வைத்து வைக்கவும். பூச்சிக்கொல்லிகள் உறையில் கொடுத்திருக்கும் அறிவுரைகளைப் படிக்கவும்.* 
 *உறையில் கொடுக்கப்பட்டிருக்கும் காலக் கெடுவை கிழிக்காமல் வைக்கவும்.* 
 *பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முன் அப்பகுதியில் இருக்கும் பாத்திரம் பண்டங்களை அகற்றவும்.* 
 *வீட்டில் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பின் உணவு சமைக்கும் வழக்கமான இடங்களை நன்கு கழுவவும்.* 
 *பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்திய பின் சன்னல்களைத் திறந்து காற்று வெளியேற வகைசெய்யவும்.* 
 *வீட்டு முற்றம்/தோட்டத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உங்கள் வீட்டில் அல்லது திட்டத்தில் இருக்கும் பூச்சி பிரச்சினைகளைத் தீர்க்க வேதியற் பொருட்களைப் பயன்படுத்தாமல் வேறு வழிகளைக் கையாளவும். அப்படி வேதியற் பொருட்களை பயன்படுத்த வேண்டு மானால் தோட்டம் அல்லது முற்றம் முழுவதிலும்* *தெளிக்காமல் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தெளிக்கவும். வெளியிடத்தில் காற்று அல்லது மழை உள்ள நாட்களில் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டாம்.* *அவை காற்றில் எடுத்துச் செல்லப்படும் அல்லது நீச்சல் குளம் அல்லது காய்கறித் தோட்டத்துக்குள் ஊடுறுவக் கூடும்.* 
 *பூச்சிக் கொல்லி உறைகளில் உள்ள அறிவுரைகளைப் பின்பற்றவும் வீட்டு சன்னல்களை மூடி குளிர்பதனியை நிறுத்தவும். பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் இந்நடவடிக்கைகள் தடுக்கும். தோட்ட வேலையின் போது பூச்சிக் கொல்லிகள் கையில் படாமல் இருக்க ரப்பர் கையுறைகளைப் பயன்படுத்தவும்.* *கர்ப்பிணிகள் தங்கள் கைகளால் பூச்சிக் கொல்லிகளைக் கலக்கித் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.* *தவிர்க்க முடியாவிட்டால் பாதிப்பைக் குறைக்க வெளியிடத்தில் வைத்து தனிநபர் பாதுகாப்பு சாதனங்களின் உதவியோடு (முகமூடி, உடல் மறைக்கும் ஆடைகள், கையுறை) செய்ய வேண்டும்.* *உறையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும். பணியில் பூச்சிக்கொல்லியில் இருந்து பாதுகாப்பு:🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*


 *✍️✍️✍️பூச்சிக் கொல்லி சம்பந்தப்பட்ட இடங்களில் வேலை செய்யும் பெண்கள் உயர் அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு சென்று பணிமாற்றம் பெற்றுக்கொள்ள வேண்டும்,.* 
 *பாதுகாப்பு கவசங்கள் அணிய வேண்டும். வீடு செல்லு முன் குளித்து, உடைகலையும் காலணிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.* 
 *பணி உடைகளை அலுவலகத்திலோ அல்லது வீட்டில் என்றால் தனி இடத்திலோ வைத்துத் துவைக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?* 
 *பூச்சி, கொசு, உண்ணி ஆகியவற்றை விரட்ட இவை* *பயன்படுத்தப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் இவற்றை பயன்படுத்துவது* *பாதுகாப்பானதே. உறையில் இருக்கும் அறிவுரைகளைப் பின்பற்றவும்.✍️✍️✍️* 


 *👹பூச்சிக் கடியைத் தடுக்கும் பிற வழிகள்👹* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொசு அதிகமாகக் கடிக்கும் விடிகாலை மற்றும் பின் மாலைப் பொழுதுகளில் வீட்டுக்குள் இருக்க வேண்டும். கை கால்களை மறைக்கும் உடைகளை அணிந்து வெளியில் செல்லவும் பூச்சிக் கடியைத் தவிர்க்க ஒருங்கிணைந்த நோய்பரப்பி மேலாண்மையை இனைத்துக் கொள்ளவும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கையுடன் இருப்போம்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment