Wednesday, October 28, 2020

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதை பற்றிய தகவல்கள்

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️*


 *👖👖👖🧣🧣🧣இன்று நாம் பார்க்க இருப்பது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதை  பற்றிய தகவல்கள்👖👖👖🧣🧣🧣* 


 *👖👖👖இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்?🧣🧣🧣* 


 *✍️✍️✍️இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது* . *ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு உணர்விழந்த சம்பவத்தை அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கிறார்.* *அதனால் அவரது கால்களின் கீழ்ப்பகுதியில் உணர்விழந்துபோன நிலையில் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துவிட ஆபத்து அதிகமானது. அவரது கால்களின் கீழ்ப்பகுதி பெருமளவு வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் கழற்ற முடியாமல் அதை அவசர அவசரமாக வெட்டி எடுக்க வேணிய அளவுக்கு நிலைமை விபரீதமானது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️படக்குறிப்பு, இறுக்கமான ஜீன்ஸ்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றனஅவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸை வெட்டி எடுத்துவிட்டு அவருக்கு நான்கு நாட்களுக்கு மருத்துவமனையில் வைத்து நரம்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு தொடர்* **சிகிச்சையளிக்கப்பட்டது. இரத்த ஓட்டத்தை தடுத்து நரம்புகளை பாதிக்கக்கூடும்* 
 *அவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணிநேரம் அமர்ந்திருந்ததால் அவரது கால்களுக்கான இரத்த ஓட்டம் தடைபட்டு பாதிப்பு ஏற்பட்டதாகவும்,** *அத்துடன் அவரது கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.‘ஜர்னல் ஆப் நியூராலஜி, நியூரோசர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இது குறித்த மருத்துவர்களின் குறிப்புகள்* *வெளியிடப்பட்டுள்ளன.இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடலுக்கு நல்லதல்ல என்கிற எச்சரிக்கை* *விடப்படுவது இது முதல் முறையல்ல. இளம்தலைமுறையினர் மத்தியில் தங்களின் உடல் வனப்பை வெளிப்படுத்தும் நாகரிக உடையாக இறுக்கமான ஜீன்ஸ் பார்க்கப்பட்டாலும், பெரிதும்* *விரும்பப்பட்டாலும், அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கிற எச்சரிக்கைகள் தொடர்ந்தும் மருத்துவர்களால் விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.*


 *✍️✍️✍️இறுக்கமான ஜீன்ஸ்கள் அணிவது நரம்பியல் பாதிப்புக்களை* **ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை ஏற்கனவே பல ஆய்வாளர்கள் இறுக்கமான, லொ கட் ஜீன்ஸ்களை அணிபவர்களுக்கு தொடைகளில் வலியும், எரிச்சலும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.* *விதைப்பைகள் பாதிக்கப்பட்டு விந்தணு உற்பத்தி குறையும் அதிலும் ஆண்கள் இப்படியான இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிந்தால் அவர்களின் விதைப்பைகளின் அமைப்பே மாறி, திருகப்பட்ட தோற்றத்தை பெறும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் ஆண்களின் விந்தணு உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள். அதனால் தான் குழந்தை பெற விரும்பும் ஆண்கள் இறுக்கமில்லாத உள்ளாடைகள் மற்றும் கால் சராய்களை அணியும்படி தாங்கள் பரிந்துரைப்பதாக தெரிவிக்கிறார் மருத்துவர் சாரா ஜார்விஸ்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இறுக்கமான ஜீன்ஸ்களால் விதைப்பைகள் உருமாறி, விந்தணு* *உற்பத்தி குறையும்காரணம் இறுக்கமான உடைகள்* *அணியும்போது ஆணின் விதைப்பைகள் தொடர்ந்து உடலோடு அழுத்தி இறுக்கிவைக்கப்படுகின்றன. அது விதைப்பைகளின் வெப்பத்தை* *அதிகரிக்கச் செய்து விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என்கிறார் சாரா. எனவே குழந்தை பெற விரும்பும் ஆண்கள் ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு* *உதவும் வகையில் இறுக்கமான ஜீன்ஸ் அணியாமல், காற்றோட்டமான* *ஆடைகளை அணியவேண்டும் என்கிறார் அவர்.* 
 *சிறுநீர்ப்பாதைத் தொற்று மற்றும் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்*
 *சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பவர்களும் கூட இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.* *காரணம் இறுக்கமான உடைகள் அவர்களின் சிறுநீர்ப்பாதை தொற்றை அதிகரிக்கச் செய்யும் என்றும் மோசமடையச் செய்யும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.* 
 *அதேபோல, நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்களும் இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️காரணம் இறுக்கமான ஜீன்ஸ்கள், அடிவயிற்றில் கூடுதலான அழுத்தத்தை செலுத்துவதால்,* *வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மேல்நோக்கி உந்தப்பட்டு ஏற்கனவே இருக்கும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்✍️✍️✍️.* 


  *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சிறுநீர்ப்பாதை தொற்றையும் அதிகரிக்குமென அச்சம்அதேசமயம், இத்தகைய ஆபத்துக்களின்* *சதவீதத்தை அளவுக்கு அதிகமாக நினைத்து கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் ஜார்விஸ்.* 
 *நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் உடல் வனப்பை காட்ட நாகரிக உடையாக இறுக்கமான ஜீன்ஸ் அணிய விரும்பும்போது அதில் இருக்கும் ஆபத்தையும்* *உணர்ந்திருப்பது அவசியம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🛑🛑🛑சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!🛑🛑🛑* 

 *✍️✍️✍️கோடையில் வெப்பமான கதிர்களும், சூடான காற்றும் நம்மை பாடாய்ப்படுத்தி விடும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள்✍️✍️✍️:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இறுக்கமான ஆடைகள் நம்மை பல்வேறு விதங்களில் தொல்லைப்படுத்துகின்றன. இறுக்கமாக உடைகளை அணிவதால் மேலும், நாம் கோடையின் வெம்மையைக் கூட்டுகிறோம். கோடையில் இப்படி ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான பேண்ட், உள்ளாடைகள், பாவாடைகள் போன்றவை காற்றோட்டத்தை முழுவதுமாக தடை செய்துவிடும். அதிமாக வியர்க்கும், இதனால் வியர்வையானது எளிதில் ஆவியாக முடியாமல் போய்விடுவதால் உடலில் உப்பு படிந்து, அரிப்பு ஏற்படும். இது மட்டுமின்றி கோடைக்காலத்தில் ஜீன்ஸ் போன்ற உடைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவ்வகை ஆடைகளால் இறுக்கம், வியர்வைத் தேக்கம், அரிப்பு, தோல் நோய்கள் ஏற்படுகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️தற்போது பாலியஸ்டர் போன்ற ஆடைகள் நிறைய வந்து விட்டன. வெயில் காலத்தில் இவ்வாடைகள் நமது உடலுக்கு ஏற்றவைகள் அல்ல. இவ்வகை ஆடைகள் எளிதில் சூடாவதுடன் நமது உடம்பின் மேல் தோலையும் எளிதில் சூடாக்கிவிடுகின்றன. இதனால் தோலின் நிறம் மாறுவது மட்டுமின்றி தோல் அலர்ஜியும் ஏற்படுகின்றன.✍️✍️✍️* 


 *🥎தளர்வான ஆடையே சிறந்தது🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கோடைக்காலத்தில் தளர்வான ஆடையையே அணியுங்கள். தளர்வான ஆடைகள் உடம்பை இறுக்கி பிடிக்காது. இதனால் உடம்புக்கு காற்றோட்டம் எளிதில் கிடைக்கிறது எனவே கோடைவெம்மை குறைகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥎கெட்டியான நிற ஆடைகள்🥎* 


 *✍️✍️✍️கோடையில் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தை கவனித்தல் அவசியமாகும். காரணம் சிவப்பு, கருப்பு மற்றும் கெட்டியான பச்சை போன்ற நிறங்கள் கோடையில் மேலும் வெம்மையைக் கூட்டுகின்றன. இந்நிறங்கள் சூரிய ஒளியின் உக்கிரத்தைக் கூட்டி விடுகின்றன. இந்நிறங்கள் கண்களை அதிகமாக உறுத்துகின்றன. அதிக ஒளியில் கண்களை உறுத்துவதால் கண் தசைகள் எளிதில் களைப்படையும். இது போன்று பெரிய டிசைன் போட்ட ஆடைகளையும் தவிர்ப்பது நல்லது. எனவே, கோடையில் வெளிர்நிற ஆடைகளையும், சிறிய டிசைன் போட்ட உடைகளையும் அணிதல் நல்லது.✍️✍️✍️* 


 *🥎ஆபரணங்கள்🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கோடைக்காலத்தில் ஆபரணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அதிக ஆபரணங்கள் மற்றும் ஆபரணங்களை நெருக்கமாக அணிவதால் வியர்வை ஆவியாகாமல் அரிப்பு ஏற்பட்டு தோல் நோய்கள் வர ஏதுவாகிவிடும். எனவே, கோடைக்காலத்தில் எளிமையான நகைகள் அணியுங்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *👠👜🥾கைப்பைகள், செருப்புகள்👠👜🥾* 


 *✍️✍️✍️வெளியே போகும்போது பெரிய கைப்பைகள் பயன்படுத்த வேண்டாம். பெரிய கைப்பைகள் அசௌகரியத்தை தருவது மட்டுமின்றி காற்றோட்டத்தையும் தடுக்கும். கெட்டியான கண்களை உறுத்தும் நிறங்களை கொண்ட கைப்பைகளை தவிர்த்தல் நல்லது. அது போல கோடையில் பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது. பிளாஸ்டிக் செருப்புகள் வெயிலில் விரைவாக சூடாகிவிடும். இதனால் கால் பாதங்கள் சூடாகி தோலின் மென்மை பாதிக்கப்படும் எனவே, தோல், ரப்பர், செருப்புகளை பயன்படுத்துதல் சிறந்ததாகும்✍️✍️✍️* 
.

 *👗👚👗குழந்தைகளுக்கான ஆடைகள்👗👚👗* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குழந்தைகளின் ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கு வெண்ணிற துணிகளையும், வெள்ளை ஆடைகளையும் பயன்படுத்துதல் குழந்தைகளின் மென்மையான தோலுக்கு சிறந்ததாகும். தளர்வான உடைகள் மற்றும் பருத்தியிலான சாக்ஸ், கையுறைகளை பயன்படுத்துதல் மிக நல்லதாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *👖👖👖🧣🧣🧣கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்❓👖👖👖🧣🧣🧣*


` *✍️✍️✍️ஆடைகளை வைத்து மனிதர்களை எடை போடலாம்' என்பது பழங் கணக்கு. அணியும் ஆடைகளை வைத்தே ஒரு மனிதனுக்கு வர வாய்ப்பிருக்கும் நோய்களைக் கணிக்கலாம் என்பது புதுக்கணக்கு. இன்று நாகரிக வளர்ச்சி நம் ஆடைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இறுக்கமான ஜீன்ஸ், சட்டை, கோட், அணிவது வழக்கமாகிவிட்டது. பொதுவாக இப்படிப்பட்ட ஆடைகள் குளிர்பிரதேசங்களில் அணிய உகந்த இந்த ஆடைகளை வெப்பமான நம் நிலப்பகுதியில் அணிவதன் மூலம் உருவாகும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகிறது. இன்று நோய்கள் பல்கிப்பெருகியிருப்பதற்கு ஆடைகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதால், அதன்மீது ஒரு கண் வைக்க வேண்டியது அவசியமாகிறது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆடை என்பது ஒருவரின் அங்கங்களை மறைப்பதற்கான `சாதாரண உபகரணம்’ மட்டுமல்ல, நோய்களைத் தடுக்க உதவும் மருத்துவ உபகரணமும்கூட. ஒருவர் வாழும் சூழல், தகவமைப்புக்கேற்ப ஆடைகள் அணிவதன்மூலம் நோய்கள் வரவிடாமல் முட்டுக்கட்டை போடலாம். ஆடையின் தன்மை மற்றும் நிறங்களுக்கென தனித்தனி மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நம் சீதோஷ்ண நிலைக்குப் பருத்தி ஆடைகளே ஏற்றது. நம் முன்னோர் அதையே உடுத்தினர். பருத்தி ஆடைகள் உடல் வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும். வெயில் தாக்கும்போது ஈரத்தை வெளியேற்றிவிடும். இதனால் உடலுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது. ஆனால், ஜீன்ஸ், கோட் முதலிய ஆடைகளை அணிவதுதான் நாகரிகம் என்று நினைப்பது, `புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் கதைதான்…✍️✍️✍️’* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நமது சீதோஷ்ணம், சுற்றுச்சூழலுக்கேற்ப அற்புதமான ஆடை ரகங்கள் நம்மிடையே இருக்கும்போது, ஒவ்வாத ஆடை ரகங்களை நாடிச் செல்வது உடலுக்குப் பெரும் பாதிப்புகளை உண்டாக்கலாம். வெப்பமண்டலத்தில் வாழ்பவர்கள் இறுக்கமான ஆடைகளை நீண்டநேரம் அணிவதால், வியர்வையில் உறிஞ்சப்படாமல் நீண்ட நேரம் வியர்வை உடலில் தங்கும். அதனால், உடலில் கிருமிகளின் தாக்கம் அதிகரித்து, சரும நோய்கள் பெருக வாய்ப்பு உள்ளது. மேலும், உடலில் வியர்வையின் நாற்றம் அதிகரித்து படிப்படியாக வேறு சில பிரச்னைகளும் உண்டாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நமது கலாசாரம் இயற்கையுடன் இணைந்தது. `ஆள் பாதி ஆடை பாதி’ என்பது, அழகைக் குறிப்பது மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கான திறவுகோலை உணர்த்துவதும்கூட. `கந்தலானாலும் கசக்கிக் கட்டு' என்பது நமது பாரம்பர்யம். ஆனால் இன்று ஜீன்ஸ் வகையறாக்களை வாரக்கணக்கில் துவைக்காமல், கந்தல் கந்தலாக மாறி நாற்றம் எடுத்தாலும்கூட பெர்ஃபியூம்களைப் போட்டுக்கொண்டு செல்லும் நவநாகரிக மக்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காற்றுகூட நுழைய முடியாத இறுக்கமான ஆடைக்குள் நீண்டநேரம் இருப்பது, சரும நோய்களுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பதற்கு நிகரானது. இவற்றால் சருமத்தில் சிவந்த நிறக் கொப்புளங்கள், அரிப்பு, எரிச்சல் என அறிகுறிகள் தோன்றக்கூடும். அடிவயிறு மற்றும் கால் பகுதிகளில் அழுத்திப் பிசையும் இறுக்கமான ஆடைகளை நீண்ட நாள்கள் தொடர்ந்து அணியக் கூடாது. அப்படி அணிந்தால் செரிமானமின்மை, உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, தொடைப்பகுதி மரத்துப் போவது, பின்னங்காலில் வலி எடுப்பது போன்ற பிரச்னைகள் உருவெடுக்கும். இயற்கை சுழற்சி இன்று மாறிவிட்டது. ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலும்கூட அனல் காற்று வீசுகிறது. அந்த அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. இப்படி வெப்பம் தகிக்கும் தேகத்தில் இறுக்கமாகக் கவ்வும் ஜீன்ஸ் ஆடைகளை அணிந்தால் என்னாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️தலை முதல் கால் வரை உடலை முழுவதும் மறைத்துக்கொள்ளும்விதமாக ஆடை அணிந்தால், வெயிலின்மூலம் நமக்குக் கிடைக்கும் வைட்டமின் – டி குறைவாகவே கிடைக்கும். இதனால், அக்குள், தொடை இடுக்குகள் போன்ற பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதுடன், கருமை நிறத்தில் படைகளும், கடுமையான அரிப்பும் உண்டாகலாம்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இன்றைய சூழலில் இறுக்கமான ஆடைகளால் குழந்தைகள் மற்றும் முதியோருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு உண்டாகி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இறுக்கமான ஆடைகள் உடுத்துவதால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், சினைப்பை நீர்க்கட்டிகள் ஆகியன அதிகரிக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️குளிர்காலத்தில் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதில் தவறேதுமில்லை. ஆனால், நாள் முழுக்க அந்த உடையையே உடுத்தினால் பிரச்னைதான். நமது சூழலுக்கேற்ப காற்று உட்புகும்விதமான பருத்தியினாலான கதர் ஆடைகள்தான் பொருத்தமாக இருக்கும். ஆடை விஷயத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் ஆடைப் பராமரிப்பிலும் கவனம் செலுத்தவேண்டும். ஆடைகளைத் துவைத்தவுடன் வெயிலில் காயவைத்து அணிவது சிறந்தது. எனவே, மூன்று மாதத்துக்கு ஒருமுறை உள்ளாடைகளை மாற்ற வேண்டியது அவசியம்✍️✍️✍️* 
.

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்போது வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு ‘நிற மருத்துவம்’ (Colour Therapy) பிரபலமாகி வருவது அனைவரும் அறிந்ததே. இயற்கைக் காற்று உடல் பகுதிகளில் தவழ்ந்து செல்வதென்பது, புத்துணர்ச்சியைச் செலவு இல்லாமல் வழங்கும் அழகிய செயல்பாடு. எனவே, நோய்களை உண்டாக்காத ஆடைகளை அணிவோம். சூழல்… வயது… உடல் அமைப்புக்கேற்ற ஆடைகளை அணியத் தொடங்கினால், ஆடைகளால் உண்டாகும் நோய்களைத் தடுக்கலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும் சுகாதாரத்தோடு வாழ்வேம்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment