Tuesday, November 19, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖0⃣1⃣*

*🏮🍂இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அனைத்து மனிதர்களும் எழுப்பப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் முன்னால் நின்று கொண்டிருப்பார்கள்.* பூமியில் வாழும்போது செய்த அனைத்துக் காரியங்கள் குறித்தும் மனிதர்களிடம் கேள்வி கேட்கப்படும்.
*அந்த நாளில் அனைத்து அதிகாரமும் ஆதிக்கமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். அப்போது நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும்.* இருப்பினும், அவன் தமது மனம்போன போக்கில் விசாரித்து கூலி வழங்கமாட்டான். அவன் நீதமானவன். அவன் நமது செயல்களுக்கும் சில விதிமுறைகளை வழிமுறைகளை வைத்திருக்கிறான். *அந்த வகையில், அவனது அனைத்து விசாரணைகளும் அதற்குரிய கூலிகளும் ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும். எவரும் எந்தவொரு செயலையும் எந்த வகையிலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.*

*🏮🍂நன்மையான காரியங்களைச் செய்திருக்கும் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குரிய பரிசுகளை, வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். தீமையான காரியங்களைச் செய்திருக்கும் குற்றவாளிகள் தங்களுக்குரிய தண்டனைகளை, வேதனைகளைப் பெற்றுக்கொள்வார்கள்.* சின்னஞ்சிறிய அற்பமான செயல்களாக இருந்தாலும், மிகப்பெரிய மகத்தான காரியங்களாக இருந்தாலும் அனைத்துக்கும் அந்நாளில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருக்கும். பல்வேறு விதமான சான்றுகள் இருக்கும்.

*🏮🍂இவ்வாறு, நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.*

_*🍃சாட்சி கூறுவோர் மீதும் சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!*_

*📖 (அல்குர்ஆன் 85:3) 📖*

_*🍃ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர்.*_

*📖 (அல்குர்ஆன் 50:20,21) 📖*

_*🍃ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் நாளில்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு (பேச) அனுமதிக்கப்படாது. அவர்கள் (வணக்க வழிபாடுகள் செய்யுமாறு) வற்புறுத்தப்படமாட்டார்கள்.*_

*📖  (அல்குர்ஆன் 16:84) 📖*

_*🍃நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் முன் வரும் நாளிலும் நாம் உதவுவோம்.*_

*📖 (அல்குர்ஆன் 40:51) 📖*

_*🍃ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். “உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!” என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும்.*_

*📖 (அல்குர்ஆன் 28:75) 📖*

_*🍃பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 39:69) 📖*

*🏮🍂எந்தவொரு நல்லறமும் செய்யாதவருக்கு சொர்க்கம் தரப்படுகிறது என்று அதிருப்தியில் எவரும் எதிர்த்துப் பேசுவதற்கோ வாதம் செய்வதற்கோ வாய்ப்பே இருக்காது. எந்தவொரு தீமையும் செய்யாதவருக்கு நரகம் கொடுக்கப்படுகிறது என்று பொய் சொல்லி உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.* காரணம், நன்மைகள் தீமைகள் அனைத்துக்கும் மிகத் துல்லியமான சாட்சிகள் இருக்கும். *இந்த உலகில் வாழும்போது, நமக்குத் தெரியும் வகையிலும் தெரியாத வகையிலும் பல சாட்சிகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த வகையில், மறுமையில் எவ்வாறெல்லாம் சாட்சிகள் சூழ்ந்திருக்கும் என்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்து கொள்வோம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment