Tuesday, November 19, 2019

தர்கா வழிபாடு

உங்களுக்கு முன் சென்றோரின் வழியை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றதை மெய்ப்பிக்கும் வகையில் கனிசமான முஸ்லிம்கள் பிற சமயக் கோட்பாடுகளைத் தமதாக்கிக் கொண்டு விட்டனர்.

‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது’ என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைக் கூட பலர் தூக்கி எறிந்து விட்டு சமாதிகளையும் அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களையும், கொடி மரங்களையும் வணங்கி வருகின்றனர்.

நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக மாற்றிக் கொண்ட யூதர்கள் மற்றும் ஈஸா நபியைப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

என்றைக்கோ மரணித்து விட்டவர்களிடம் குழந்தை வரம் கேட்கின்றனர்! தமது வறுமையை முறையிடு கின்றனர்! நோய் தீர்க்க வேண்டுகின்றனர்.

சமாதிகளில் காணிக்கை செலுத்துகின்றனர். விழுந்து கும்பிடுகின்றனர்! அறுத்துப் பலியிடுகின்றனர்! நேர்ச்சை செய்கின்றனர்!

இவற்றை இஸ்லாத்தின் பெயரால் தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவற்றுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்று போலி மத குருமார்கள் இவர்களுக்குக் கற்பித்திருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம்.

முஸ்லிம்களை நிரந்தர நரகத்தில் தள்ளி விடக் கூடிய இந்தப் பாவத்திலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்கும் நோக்கத்தில் ‘தர்கா வழிபாடு’ என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.

தர்கா வழிபாட்டுக்கும் தனி நபர் வழிபாட்டுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்துக்கும் தக்க பதில் தரப்பட்டுள்ளது.

திறந்த மனதுடன் இந்நூலை வாசிக்கும் எவரும் தர்கா வழிபாடு இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் ஏகத்துவக் கொள்கையை எழுச்சி பெறச் செய்வானாக என்று வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

No comments:

Post a Comment