Wednesday, November 20, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖0⃣2⃣*

*☄அல்லாஹ்வே முதல்*
               *சாட்சியாளன் [ 01 ] ☄*

*🏮🍂நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிந்தவன். உறக்கம், ஓய்வு போன்ற பலவீனம் இல்லாமல் இரவு பகல் முழுவதும் நம்மை கண்காணித்துக் கொண்டிருப்பவன்.* மனிதர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக துல்லியமாக அறிந்தவன். இத்தகைய இறைவன் மறுமை நாளில் நமது செயல்களுக்கு முதல் சாட்சியாக இருப்பான்.
*நாம் நல்லது செய்தோமா❓ கெட்டது செய்தோமா❓ என்று பகிரங்கப்படுத்துவதற்கு அவனே போதுமானவன். இதை நாம் நமது மனதில் முதலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.* இதை குர்ஆனிலும் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். *இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அந்த ஆதாரங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.*

*أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَلَا تَمْلِكُونَ لِي مِنَ اللَّهِ شَيْئًا ۖ هُوَ أَعْلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِ ۖ كَفَىٰ بِهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ ۖ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ*

_*🍃“இவர் இதை இட்டுக்கட்டிவிட்டார்” என்று கூறுகிறார்களா❓ “நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_

*📖 (அல்குர்ஆன் 46:8) 📖*

_*🍃முஹம்மதே!) “நீர் (இறைவனின்) தூதர் அல்லர்” என்று, மறுப்போர் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். வேதத்தின் அறிவு உள்ளோரும் போதுமானவர்கள்” என்று கூறுவீராக!*_

*📖 (அல்குர்ஆன் 13:43) 📖*

*وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ*

_*🍃(முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.*_

*📖 (அல்குர்ஆன் 10:46) 📖*

_*🍃அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை” என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்” என்றும் கூறுவார்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 10:28, 29) 📖*

*وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ ۚ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ*

_*🍃“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் “தூதர்’ உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா❓ அவருக்கு உதவுவீர்களா❓” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா❓ எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா❓” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.*_

*📖 (அல்குர்ஆன் 3:81) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment