Monday, November 25, 2019

ப்ராய்லரா? நாட்டுக்கோழியா?"

#விழிப்புணர்வு_பதிவு:
//மருத்துவர் ஃபரூக் அப்துல்லா பதிவில் இருந்து...
வீண் வதந்தி வேண்டாமே!!!//

"சார்.. பேலியோல  கோழி சாப்ட  சொல்றீங்க ஓகே . ப்ராய்லரா? நாட்டுக்கோழியா?"

" ப்ராய்லர் தான் சார். உங்க ஏரியால  நாட்டுக்கோழி கிடைக்குதா  சார்.?"

"இல்ல சார். ஆனா வாரம் ஒரு தடவ  சந்தைல  வாங்க முடியும் சார்"

" சந்தைல  வாங்குற  முக்காவாசி  நாட்டுக்கோழியும்  பண்ணைக்கோழிதான்குறது  உங்களுக்கு தெரியுமா  சார்"

" அப்படியா சார்.. தெரியாதுங்களே.. நாட்டுக்கோழினு  கிலோ 350 டூ 450 வரைக்கும் விக்குறாங்க சார் .. நான் தான் ப்ராய்லர்  கோழிக்கு பயந்து  அத வாரம் ஒரு தடவ வாங்கி சாப்புட்றேன் "

" நான் டெய்லி கிலோ 180 ரூபாய்க்கு  
கடந்த நாலு வருசமா  டெய்லி அரைக்கிலோ  ப்ராய்லர் மட்டும் தான் சார் சாப்புட்றேன் " 

" டாக்டர் என்ன சொல்றீங்க? ப்ராய்லர்  சாப்ட்டா  ஆண்மை போய்டும்னு  சொல்றாங்களே ?"

"என் ரெண்டாவது  பொன்னுக்கு  ஒரு வயசு தான் ஆகுது.  இப்ப சொல்லுங்க ப்ராய்லரால  ஆண்மை போகுமா?" 

"இல்லீங்க  சார்.. போகாது.. ஆனா  பொம்பளை  புள்ளைங்க  சீக்கிரம் வயசுக்கு  வந்துருதாம்ல  சார்" 

" ஓ... எத்தனை வயசுல வருதுகளாம்.. அஞ்சு  வயசுலயா.. ஆறு வயசுலயா?"

"பத்து பதினோரு  வயசுலயே  வந்துருதுகளாம்ல  சார். அதான்  பயமா  இருக்கு" 

"சகோ.. பத்து வயசுல  இருந்து பதினாறு  வயசுக்குள்ள  எப்ப வேணாலும்  வயசுக்கு வரலாம். வயசுக்கு வரதுக்கு  பல காரணங்கள் இருக்கு. நம்ம குடும்பத்தோட  மொத்த வருமானம் அதிகமாக இருந்தா  பெண்கள் வயசுக்கு வர்ற  டைம்  சீக்கிரம் இருக்கும்.  ஆனாலும் இந்தியாவோட  சராசரி பெண்கள் பூப்பெய்தும்  வயசு 13 முதல் 14 தான். ஒன்னு ரெண்டு  இங்குட்டும்  அங்குட்டும்  இருக்கும் தான் ஆனா அதுக்கு ப்ராய்லர் கோழி மேல பலி போட்றதுக்கு சரியான முகாந்திரம்  இல்லை" 

" ப்ராய்லர் சாப்ட்டா கேன்சர் வரும்குறாங்க.."

"நீங்க இப்ப  எதுல  வந்தீங்க  கிளினிக்குக்கு?" 

" கார்ல  சார்"

" கார்ல  இருந்து வர்ற  புகைல  இருக்குற  கார்பன்  துகள்கள்  நம்ம நுரையீரலுக்குள்ள  போய் கேன்சர் வரவைக்குது.  இனிமே  வண்டிய  வீட்டுல  நிப்பாட்டிட்டு  மாட்டு வண்டில  வாங்க.. வர்றீங்களா?" 

"சார்.. மதுரைல  இருந்து  மாட்டுவண்டில  எப்டி சார்.. ரெண்டு நாளாகும் " 

" கேன்சர் உருவாக்கும்னு  ப்ரூவ்  ஆன விசயத்துக்கே  நாம சாக்கு வச்சுருக்கோம்
மேலும் நமக்கு நல்லதா கெட்டதானு  பார்த்து ரிஸ்க் எடுக்குறோம் ..ஆனா ப்ராய்லர்னால  கேன்சர் வருதுனு  எந்த எவிடென்சும்  கிடையாது. அத மட்டும் ஏன் நம்புறோம்?" 

" சார்.. நீங்க ஏன் ப்ராய்லர  விடாம  சப்போர்ட் பண்றீங்க.. ப்ராய்லர் கறிக்கடை காரங்க டெய்லி உங்களுக்கு இலவசமா  கறி கொடுத்து ப்ரமோட்  பண்ண சொல்றாங்களா?" 

" ஹி ஹி.. இப்ப வரைக்கும் எனக்கு தேவையான கறியை நான் காசு கொடுத்து தான் வாங்கி சாப்புட்றேன்.  
ஆனா நான் ஏன் தெரியுமா  ப்ராய்லர  சப்போர்ட் பண்றேன். 

ப்ராய்லர் மூலமா தான் ஏழைகள் கூட கறி  சாப்ட முடியுது. 
லேயர்  முட்டைகள  தமிழக பள்ளிகளில்  சத்துணவுக்கு  வாரம் ஐந்து நாள் போடப்பட்றதுனால  தான்..தமிழகம் சோமாலியாவ  மாறாம  இருக்கு. நீங்களும் நானும் மீன் மட்டன் எடுத்து வாரம் ஒருதடவ  சாப்ட முடியும். ஆனா ஏழைகள்னால  கிலோ ஐநூறு  கொடுத்து மட்டன் வாங்க முடியுமா? கிலோ ஐநூறுக்கு  மேல விக்குற  மீன் வாங்க முடியுமா? 

ஏழைகளுக்கும்  புரதச்சத்து  கிடைக்கச்செய்யும் 
ப்ராய்லர் மற்றும் லேயர் முட்டைகளை நான் தொடர்ந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஆதரிப்பேன்.  

இதற்கு எதிராக கிளம்பும் வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பேன். 

ப்ராய்லர் கோழியையும் 
லேயர் முட்டைக்கு எதிராகவும்  வதந்தி பரப்புவோர் 

ஏழைகளின் வீட்டுப்பிள்ளைகள்  வாரம் ஒருமுறையேனும்  தரமான புரதம் சாப்பிட ஒரு மாற்றை காண்பித்து விட்டு பிறகு வதந்திகளை  ஷேர் செய்யுங்கள் 

மாதம் ஒருமுறை மட்டும் ஒரு கிலோ ப்ராய்லர் கோழி எடுத்து ஐந்து பேர் கொண்ட வீட்டில் பகிர்ந்து சாப்பிடும் ஏழை வீடுகளை நான் அறிவேன் என்பதால் 
என்னால் அவர்கள் உண்ணும் அந்த குறைந்தபட்ச புரதம் நிறைந்த உணவை தடுக்க முடியாது. 

அவர்கள் உண்ணட்டும். 

நன்றி:
Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

No comments:

Post a Comment