Wednesday, November 20, 2019

ஜமாஅத்துகள் முன் வர வேண்டும் !!!

சட்டி சட்டியாக சோறு ஆக்கிப் போடுவதை நிறுத்தி விட்டு... சமுதாய மக்களுக்கு கல்வியை
வழங்க ஜமாஅத்துகள் முன் வர வேண்டும்
***********************************

முஸ்லிம் சமுதாயத்திடம் உள்ள செல்வம்,
நல்ல தரமான உயர் கல்வி நிறுவனங்களை 
உருவாக்குவதற்கு பயன்படட்டும்,

யாரையும் அண்டிப்பிழைக்க வேண்டிய
அவசியம் இல்லை,

பாத்திமாக்களை இழக்க வேண்டிய
நிர்பந்தம் இல்லை,

நம்மை விட எண்ணிக்கையில் 
குறைந்த ஒரு சிறுபான்மை சமுதாயம் 
எப்படி சொந்தக் காலில் 
தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது?

இட ஒதுக்கீடு கோரவில்லை,
அரசு வேலைக்காக காத்திருக்கவில்லை;

கொடி பிடிக்கவில்லை,
கோஷங்கள் எழுப்பவில்லை,

பொது வெளியில் இறங்கி 
ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை,

சூடான விவாதங்களில் பங்கெடுப்பதில்லை 
அரசியல் கட்சிகள் இல்லை,
வாக்குகள் சேகரிப்பதில்லை

தங்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பை 
தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள், 

கல்வி நிறுவனங்களை கையில் வைத்திருப்பதால் 
கவலை இல்லாமல் வாழ்கின்றனர்,

தர்காக்களில் கொடி ஏற்றுவதையும்
சட்டி சட்டியாக சோறு ஆக்கிப் போடுவதையும் 
நிறுத்தி விட்டு ,

வசதியுள்ள ஜமாஅத் துகள் 
சமுதாய மக்களுக்கு உயர் கல்வியை
வழங்க முன் வர வேண்டும், 

கோடி கோடியாக கொட்டிக்கிடக்கும் 
சொத்துக்களை கல்விக்காக பயன்படுத்த வேண்டும்,

நமது சமுதாயத்தில் 
சோற்றுக்கு வழியில்லாதவர்களை விட 
கல்விக்கு வழியில்லாதவர்களே அதிகம்.

ஷேக் சையதுஅலி பைஜி

No comments:

Post a Comment