Tuesday, November 19, 2019

ஸலாம்:சொல்லக்கூடாத இடங்கள்

*⛱⛱மீள் பதிவு⛱⛱* 


*📚📚📚ஸலாம்:சொல்லக்கூடாத இடங்கள்📚📚📚*
 *👉👉👉ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இருந்தும்👇👇👇👇🤲👇* 

   *ஒருவர் ;: கழிக்கும் போது அவருக்கு சலாம் சொல்லக்கூடாது.*

 அப்படியே ஒருவர் கூறினாலும் நாம் அந்த நேரத்தில் பதில் சலாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் இந்நேரங்களில் சலாம்மட்டுமல்ல பொதுவாக எந்தப் பேச்சையும் பேசக்கூடாது. சாதாரண பேச்சுகளையே தவிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறபோது பிரார்த்தனையாக இருக்கக்கூடிய சலாத்தை எப்படி அந்நேரத்தில் கூறமுடியும்?. 

 *எனவே நபி (ஸல்) அவர்கள் இதை தடைசெய்துள்ளார்கள்.* 

   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருமனிதர் அவர்களை கடந்து சென்றார். அப்போது அவர் (பெருமானருக்கு) சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் சலாம் கூறவில்லை.

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (555) திர்மிதி (83)* 

   இயற்கைத் தேவையை நிறைவேற்றியதற்குப் பின்னால் சலாம் 
சொன்னவருக்கு பதில் சலாம் கூற வேண்டும். அசுத்தமான நிலையில் இருக்கும் போதோ அல்லது அசுத்தமான இடங்களில் இருக்கும் போதோ சலாம் சொல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். 

பின்வரும் ஹதீஸ் அசுத்தமான இடங்களில் சலாம் சொல்லக்கூடாது என ‏கூறுகிறது. வணக்கவழிபாடுகள் செய்யும் போது ஒழுவுடன் செய்வது சிறப்பிற்குரியது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்
   நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். 

நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில்சலாம் கூறினார்கள்..

 *அறிவிப்பவர் : அபூ ஜுஹைர் (ரலி), இப்னு உமர் (ரலி)* 
 *_நூல் : அபூதாவுத் (280) புகாரி (337)_* 

   ஆரம்பக்காலக்கட்டங்களில் நபித்தோழர்கள் தொழுகையில் இருக்கும் ஒருவருக்கு சலாம் கூறிக்கொண்டு இருந்தார்கள். தொழுபவரும் தொழுகையில் இருந்து கொண்டே பதில்ந்த கூறுவார். பிறகு இந்த வழிமுறை மாற்றப்பட்டுவிட்டது.

   நபி (ஸல்) அவர்கள்ழ தொழுதுகொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். எனக்கு பதில் சலாம் சொல்வார்கள். (ஒருமுறை) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் அவர்கள் கூறவில்லை. 

அவர்கள் (தொழுது முடித்து) சலாம் கொடுத்தபோது மக்களை நோக்கி கண்ணியத்திற்குரிய மகத்துவமிக்க அல்லாஹ் தொழுகையில் அல்லாஹ்வின் திக்ருகளைத் தவிர வேறெதையும்  மொழியக்கூடாது என (புதிதாக) ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு 
 உங்களுக்கு என்ன 

 *_அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)_  நூல் : நஸயீ (1205)*


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment