Sunday, November 17, 2019

நபிகளார் தேடிய 🤲* ⤵ *🤲பாதுகாப்பு🤲*- 12

,•┈┈• ❀❣🍃🌹🍃❣❀ •┈┈•

       *🤲 நபிகளார் தேடிய 🤲*
                           ⤵
                *🤲பாதுகாப்பு🤲*

         *✍🏻...தொடர் : [ 12 ]*

            *⛱ இறுதி பாகம் ⛱*

*☄பாவமன்னிப்பு கோருவதில்*
                *தலையான துஆ ☄*

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ، *قَالَ حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏‏ سَيِّدُ الاِسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ ‏"‏‏.‏ قَالَ ‏"‏ وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ، فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهْوَ مُوقِنٌ بِهَا، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ، فَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏"‏‏.‏"*

_*🍃‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.*_

_(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)_

*இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.*

*🎙அறிவிப்பவர் :*
            *ஷத்தாத் இப்னு*
                       *அவ்ஸ்(ரலி),*

     *📚 நூல் : புஹாரி 6306 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

           *👇 முடிவுரை 👇*

*🏮🍂நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள்.* அவை யாவும் நம் வாழ்விற்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாகும். நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளும், சோதனைகளிலும் அவர்கள் மேற்கொண்ட *பொறுமை மற்றும் பிரார்த்தனை மூலம் எவ்வாறு அச்சூழ்நிலையை கையாண்டார்களோ அவ்வாறு நமக்கும் அதேப்போன்று சோதனைகள் ஏற்படும் போது சந்தற்பங்களுக்கேற்ப நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த அனைத்தையும் கடைபிடித்து நற்பயன் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *தொடர் முடிந்தது*
                            ⤵⤵⤵
                   அல்ஹம்துலில்லாஹ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment