Sunday, November 10, 2019

துஆக்களின் தொகுப்பு - 8

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 


*📚📚📚துஆக்களின் தொகுப்பு📚📚📚*

 *பாகம் 8* 

 *👉 👉 👉 துஆக்களின் தொகுப்பு என்ற நூலில் இருந்து உங்கள் பார்வைக்கு 👇👇👇*

 *இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்*

 *ஸஜ்தாவில் ஓத வேண்டியது* 

سُبْحَانَ رَبّيَ الأَعْلَى

சுப்[B]ஹான ரப்பி[B]யல் அஃலா

 *ஆதாரம்: அஹ்மத் 3334* 

 *ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ* 

اَللّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ

அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ[B] குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு

 *இதன் பொருள்* :

இறைவா! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.

 *ஆதாரம்: முஸ்லிம் 745* 

 *ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ* 

اَللّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِيْ لِلَّذِيْ خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ

அல்லாஹும்ம ல(க்)க ஸஜத்து வபி[B](க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து ஸஜத வஜ்ஹீ லில்லதீ கல(க்)கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்அஹு வப[B]ஸரஹு தபா[B]ர(க்)கல்லாஹு அஹ்ஸனுல் காலி(க்)கீன்

 *இதன் பொருள்* :

இறைவா! உனக்காக ஸஜ்தா செய்தேன். உன்னையே நம்பினேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து, வடிவமைத்து, செவிப்புலனையும் பார்வைப்புலனையும் தஅதில் அமைத்த இறைவனுக்கே என் முகம் பணிந்து விட்டது. அழகிய முறையில் படைக்கும் அல்லாஹ் பாக்கியம் மிக்கவன்.

 *ஆதாரம்: முஸ்லிம் 1290* 

 *ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ* 

اَللّهُمَّ أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ وَأَعُوْذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

அல்லாஹும்ம அவூது பி[B]ரிளா(க்)க மின் ஸகதி(க்)க வ பி[B]முஆபா[F](த்)தி(க்)க மின் உகூப[B](த்)தி(க்)க வஅவூது பி[B](க்)க மின்(க்)க லா உஹ்ஸீ ஸனாஅன் அலை(க்)க அன்(த்)த கமா அஸ்னை(த்)த அலா நப்[F]ஸி(க்)க

 *இதன் பொருள் :* 

இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.

 *ஆதாரம்: முஸ்லிம் 751* 

 *ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ* 

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ

 *இதன் பொருள் :* 

அல்லாஹ்வே எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன். இறைவா! என்னை மன்னித்து விடு.

 *ஆதாரம்: புகாரி 794, 817, 4293, 4968, 4967* 

 *இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில்* 

رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ

ரப்பிஃக்பி[F]ர்லீ ரப்பிஃக்பி[F]ர்லீ

 *இதன் பொருள் :* 

இறைவா என்னை மன்னித்து விடு! இறைவா என்னை மன்னித்து விடு!

 *ஆதாரம்: இப்னுமாஜா 887* 

 *இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டிய மற்றொரு துஆ* 

رَبِّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ

ரப்பிஃக்பி[F]ர்லீ வர்ஹம்னீ வஜ்பு[B]ர்னீ வர்ஸுக்னீ, வர்ப[F]ஃனீ

 *இதன் பொருள் :* 

இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்கு உணவளிப்பாயாக! என்னை உயர்த்துவாயாக!

 *ஆதாரம்: இப்னுமாஜா 888* 

 *தொழுகை இருப்பில் ஓத வேண்டியது* 

اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா[B](த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபி[B]ய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வப[B]ரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபா[B]தில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்[B]துஹு வரஸுலுஹு

 *இதன் பொருள் :* 

எல்லாவிதமான கன்னியங்களும், தொழுகைகளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

 *இருப்பில் ஓதும் மற்றொரு துஆ* 

மேற்கண்ட அத்தஹியாத்தில்  அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் னபிய்யு  (நபியே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்பதற்கு பதிலாக

அஸ்ஸலாமு அலன்னபி[B]ய்யி

நபியின் மீது சாந்தி உண்டாகட்டும்  என்று படர்க்கையாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறும் ஓதலாம்.

اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَى النَّبِيِّ  وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

 *ஆதாரம்: புகாரி 6365* 

 *தொழுகையில் ஓதும் ஸலவாத்* 

மேற்கண்ட அத்தஹியாத் ஓதிய பின் கீழ்க்காணும் ஸலவாத்களில் ஏதேனும் ஒன்றை ஓதலாம்.

اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம, வபா[B]ரிக் அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா பா[B]ரக்த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்

 *ஆதாரம்: புகாரி 3369* 

اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்[B]ராஹீம, வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.

 *ஆதாரம்: புகாரி 3370* 

اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.

 *ஆதாரம்: புகாரி 4797* 

اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்[B]தி(க்)க வரஸுலி(க்)க கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம வபா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம்.

 *ஆதாரம்: புகாரி 4798, 6358*

 *மேற்கண்ட ஸலவாத்களின் பொருள்:* 

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன். இறைவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

 *இருப்பில் ஓதும் கடைசி துஆ* 

அத்தஹியாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்கு பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதலாம்.

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஹ்யா வபி[F]த்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி

 *இதன் பொருள் :* 

இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 *ஆதாரம்: புகாரி 833* 

اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّك أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நப்[F]ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த, ப[F]க்பி[F]ர்லீ மஃக்பி[F]ரதன் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கபூ[F]ருர் ரஹீம்.
இதன் பொருள் :

இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.

 *ஆதாரம்: புகாரி 834, 6326, 7388* 

اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்[F](த்)து அன்(த்)த அஃலமு பி[B]ஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த

 *இதன் பொருள் :* 

நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

 *ஆதாரம்: திர்மிதீ 3343* 

 *கடமையான தொழுகை முடிந்த பின்* 

لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ப[F]வு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்

 *இதன் பொருள் :* 

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.

 *ஆதாரம்: புகாரி 844, 6330* 

 *தொழுது முடித்தவுடன்* 

أَسْتَغْفِرُ اللهَ

அஸ்தஃக்பி[F]ருல்லாஹ்

(அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். பின்னர்

اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالاِكْرَامِ

அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபா[B]ரக்(த்)த தல் ஜலாலி வல் இக்ராம்

எனக் கூற வேண்டும்.

 *இதன் பொருள் :* 

இறைவா! நீயே சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமிக்கவன்.

 *ஆதாரம்: முஸ்லிம் 931* 

اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் ஜுபு[B]னி வஅவூது பி[B](க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்னதித் துன்யா வஅவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி

 *இதன் பொருள் :* 

இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 *ஆதாரம்: புகாரி 2822* 

رَبّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

ரப்பி[B] கினீ அதாப[B](க்)க யவ்ம தப்[B]அஸு இபா[B]த(க்)க

 *இதன் பொருள் :* 

என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!

 *ஆதாரம்: முஸ்லிம் 1290* 

 *பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்* 

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 9*

No comments:

Post a Comment