Saturday, December 27, 2014

கார்லிக் -அல்மாண்ட் சூப் !!!


கார்லிக் -அல்மாண்ட் சூப் !!!

என்னென்ன தேவை? 

பூண்டு - 6 பல், 
பாதாம் - 15,
நறுக்கிய சுரைக்காய் - 1/2 கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
பால் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - 3/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

பாதாமை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் அத்துடன் 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் விட்டு, பூண்டையும் சுரைக்காயையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அத்துடன் தேவையான தண்ணீர்விட்டு 2 விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும் அதை அரைத்துக் கொள்ளவும். கடாயில் அரைத்த சுரைக்காய் விழுதைப் போட்டு, பாதாம் விழுதை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 கொதி வரும் வரை வேக விடவும். சூடான சூப் தயார். சுரைக்காய்க்கு பதிலாக 1 உருளைக்கிழங்கு சேர்த்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment