Saturday, December 27, 2014

டிப்ஸ்:........


டிப்ஸ்:தோசை வார்க்கும் போது...!!!

சமையல் குறிப்பு:

* தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.

* பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும்.

* நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொம்பவும் மிருதுவாக வரும். அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும்.

* பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லம் போட்டுச் சாப்பிடலாம்.

வீட்டுக்குறிப்பு:

* புடவையில் வைத்து தைக்கும் ஜம்கியை ஒரு ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முமுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைத்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

* இலையுதிர் காலத்தில் பழுத்து உதிரும் வேப்பம் இலைகளை சேகரித்து எடுத்து தூள் செய்து நெருப்பில் போட்டால் புகை நெடி தாளாமல் கொசுக்கள் ஓடி விடும்.

* துணிக்கு நீலம் போடும்போது நீலம் கரைத்து ஜலத்தில் சிறிது வாஷிங் சோடாவை கலந்து கொண்டால் நீலம் திட்டுத் திட்டாகவோ அல்லது புளூ புளூவாகவோ துணியைப் பற்றாது.

http://www.koodal.com/

No comments:

Post a Comment