Sunday, September 14, 2014

நீரிழிவின் எதிரி செர்ரி

 Cerripalam with sweet and sour taste. The scientific name of the plant family rosyeciye purunas aviyam sweet cherry, sour cherry   purunas ceracas's scientific name.

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ்  அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க  சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள்  நிறைந்தது.

ஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு  பொருளாக செயல்படக் கூடியது. உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை ஆன்தோசயானின் நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும்  பணிகளில் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம்  சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் ஆன்டி-ஆக்சி  டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை. 

கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். புற்றுநோளிணி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. மெலடானின் எனும் சிறந்த  நோளிணி எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல்  தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.

இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி  போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோளிணித் தடுப்புபணியை செய்கிறது. பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற  அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.

வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலாவகை செர்ரி பழங்கள், பிற  நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங்களைவிட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம்  வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது.

No comments:

Post a Comment