Sunday, September 14, 2014

சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்து பாகற்காய்

சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்து பாகற்காய்

A flag that sleep sleep in the villages tell a thousand bitter gourd. So kaykkakkutiyatu gourd clusters. Ilaimaraivu

ஒரு கொடியை தூக்க தூக்க ஒரு ஆயிரம் பாகற்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாக காய்க்கக்கூடியது பாகற்காய். இலைமறைவு காய்மறைவு என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும் வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும்(பச்சையாக) இருந்து காயை காப்பாற்றும் சட்டென்று பார்த்தால் காய் இருப்பது தெரியாது. கொடியை தூக்கி பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும். 

பாகற்காய் பழ வகையைச் சார்ந்தது. நாம் பயன்படுத்தும் பாகற்காயை பிட்டர் கார்ட் என்கிறோம். பாகற்காயின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது. இலையும், கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும். பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாக மாறி பின் சிவப்பாக மாறும். இதன் எல்லா பாகங்களுமே கசப்பு தான். பாகற்காயை 2நாட்களுக்கு பின்னர் பிரிட்ஜில் வைக்ககூடாது. பிரஷ் ஆக வாங்கி சமைப்பதே மிகவும் நல்லது-. பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம்.. பாகற்காயின் கசப்பை கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலே உள்ள கரடுமுரடான முள்ளை சீவி விடலாம். பாகற்காயுடன் சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரைபோட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரம், இருமல், இரைப்பு நீங்கும். இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை, ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும். 

பாகல் இலையின் சாறு ஒரு அவுன்சில் சிறிது வறுத்து பொடித்த சீரகத்தூளை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ ஜீரம் நின்று விடும்.. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒருமணிநேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்கடியின் விஷம் நம் உடலில் ஏறாது. பாகல் இலையின் சாற்றில் காசி கட்டியை உரைத்து சிரங்கின் மீது தடிப்பாக தடவி வந்தால் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு சிரங்கு உதிர்ந்து விடும். 

பாகல் இலை சாற்றை ஒரு அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும். சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. பெரு நாட்டில் பாகற்காயை அம்மை நோய்க்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். பாகற்காய் ஜூசுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே மூன்று வேளை சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையும். 

3லிருந்து 8வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் கல்லீரல், பிரச்சனை வராது. மேலும் தினமும் இரண்டு வேளை 1டீஸ்பூன் பாகற்காய் ஜூசுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோயினால் ஏற்படும் ரத்தபோக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது

No comments:

Post a Comment