Monday, September 15, 2014

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் எடுப்பதற்கு தேவைப்படும் ‘Annexure A’ படிவம்

பாஸ்போர்ட் எடுப்பதற்கு பல ஆவணங்கள் நாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான ஒன்று பிறப்பு சான்றிதழ். சிலசமயம் நம்மிடம் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் இருக்கலாம். உதரணமாக பள்ளி சான்றிதழும் இல்லாமல் முனிசிபாலிட்டி சான்றிதழும் இல்லாமல் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் இந்த ஆவணங்களுக்கு மாற்றாக அரசு ‘Annexure A’ என்ற படிவத்தை அனுமதித்து இருக்கிறது. இந்த‘Annexure A’ படிவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த படிவ மாதிரியை http://passportindia.gov.in என்ற வலை தளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். இந்த படிவத்தை குறைந்த பட்ச நீதித்துறை சாராத முத்திரை தாளில்(Non- Judicial Stamp Paper) அச்சடித்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி நோட்டரி பப்ளிக் (Notary Public) சான்று பெற வேண்டும். நோட்டரி பப்ளிக் என்பவர் ஒரு அட்வகேட் / வக்கீல். மாவட்ட நீதி மன்றங்களில் நீங்கள் நோட்டரி பப்ளிக்கை அணுகலாம். அவர்களே நாம் கொண்டு செல்லும் ஆவணத்தில் சான்றளித்து முத்திரையிட்டு(Stamp) கொடுப்பார்கள். இதற்காக நோட்டரி பப்ளிக் உண்டான தொகையை கொடுக்க வேண்டும். கோர்ட் அருகமையிலேயே நீங்கள் ஆவணத்தை டைப் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.

கீழே காட்டப்பட்டுள்ளது ‘Annexure A’ -வின் மாதிரி.

No comments:

Post a Comment