Friday, September 12, 2014

‘சுகர்’ பிரச்னைக்கு ஏற்ற பழம் எது?

‘சுகர்’ பிரச்னைக்கு ஏற்ற பழம் எது?

என்.சிவசங்கர், கோவை
“எனக்கு 37 வயதாகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் இருப்பதை அறிந்தேன். எனக்குப் பழங்கள் ரொம்ப இஷ்டம். நான் பழங்களைச் சாப்பிடலாமா? அப்படி சாப்பிடலாம் என்றால், என்னென்ன பழங்களைச் சாப்பிடலாம்?”

டாக்டர் ரவிக்குமார், சித்த மருத்துவர், நெல்லை

“பழங்கள் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லதுதான் என்றாலும் சர்க்கரை நோயாளிகள் சற்றுக் கவனத்துடன் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றில் இனிப்புச் சத்து கூடுதலாக இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் அவற்றை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. நாவல் பழம் மிகவும் நல்லது. இலந்தைப் பழமும் உங்கள் உடலுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. பழுத்த கொய்யாக்கனியைத் தவிர்த்து, காய்வெட்டாக இருக்கும் கொய்யாவைச் சாப்பிடலாம். ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக உவர்ப்புச் சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும் பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கான மருந்தைத் தவறாமல் எடுத்துக்கொண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.”

No comments:

Post a Comment