Monday, September 15, 2014

இதய ஆரோக்கியம் தரும் தக்காளி

இதய ஆரோக்கியம் தரும் தக்காளி

The red color of tomatoes over the inside of his utalenkum keep our body healthy
தனது உடலெங்கும் சிவப்பு வண்ணத்தை பூசி கொண்டிருக்கும் தக்காளியின் உள்ளே நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்  ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று தக்காளியை ருசித்து உண்ணும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..  தக்காளியை பச்சையாகவும் சாப்பிடலாம், நாம் விரும்பும் வண்ணம் சமைத்தும் சாப்பிடலாம். 

கண் பார்வை

தக்காளி வைட்டமின் ஏ சத்துக்களை கொண்டுள்ளதால் கண்பார்வையை மேம்படுத்துகிறது, மேலும் இரவு நேரங்களில் ஏற்படக்கூடிய கண்  நோய்களான குருட்டுத்தன்மை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பை தடுக்க தக்காளி பெரிதும் உதவுகிறது. 

புற்றுநோய்க்கு உதவுகிறது

ஆய்வுகளின் அடிப்படையில் தக்காளி நுரையீரல் புற்றுநோய், வயிறு, மற்றும் புரோஸ்டேட் போன்றவற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆபத்தை  குறைக்கும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான லைகோபீனை அதிக அளவில் கொண்டிருக்கிறது..  

இரத்த பராமரிப்பு

ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு சிறிய தக்காளி 40% வைட்டமின் சியை, வழங்குவதோடு மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்பு  சத்துக்கள் போன்றவற்றை அளித்து உடலுக்கு தேவையான இரத்தத்தை பராமரிக்கிறது. வைட்டமின் கே இரத்தபோக்கு, இரத்தம் உறைதல்,  ஆகியவற்றை சரி செய்து சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.    

இதயநோய் 

தக்காளியில் லைகோபீன் உள்ளதால் இருதயநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.. லைகோபீன் என்கிற வேதிப்பொருள் பக்கவாத நோயை  தடுக்கும் தன்மை உடையது. தொடர்ந்து தக்காளி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு, ட்ரைகிளிசரைடு அளவை சுருக்கி, இரத்த  நாளங்களின் கொழுப்பு படிவை குறைத்து இதயத்திற்கு பாதுகாப்பு தருகிறது..  லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை  சாப்பிடுவதன் மூலம் பக்கவாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

செரிமானம்

செரிமான அமைப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் தக்காளியை உண்வில் சேர்த்துக்கொள்ளவேண்டும். தக்காளி மலச்சிக்கல்,  வயிற்றுபோக்கு பிரச்சனைகளை தடுக்கிறது. இது மஞ்சள் காமாலைநோய் வராமல் தடுத்து, உடலில் இருந்து நச்சுகளை நீக்கும் பணிகளையும்  செய்கிறது. 

No comments:

Post a Comment