Monday, September 15, 2014

வீட்டு பொருட்கள் பராமரிப்பு.

வீட்டு பொருட்கள் பராமரிப்பு.

தட்டுமுட்டுச் சாமான்கள் இல்லாத வீடு கிடையாது. அவற்றை ஒழுங்காக வைக்காவிட்டால் வீடு வீடாக இருக்காது. குப்பைககூளம் போல காட்சியளிக்கும். பர்னிச்சர்கள் முதல்,பாத்திரங்கள் வரை எல்லாமே தட்டுமுட்டுச் சாமான்கள் தான். அவற்றை அடுக்கி வைத்திருந்தால் அழகு. அழுக்கு படியாமல் பாதுகாத்தால் அழகோ அழகு. சுகமும் கூட. இல்லாவிட்டால் வீட்டிற்கு வரும் விருந்தினர் முகம் சுளிப்பர். ஏன் நாம்கூட உற்சாகம் இழந்து விடுவோம்.

பர்னிச்சர்கள் பொலிவை இழப்பதற்கு கறைவிரிசல்சிராய்ப்பு என பல காரணங்கள் உண்டு. உணவு பொருட்கள் சிந்துவதால் பர்னிச்சர் அழகை இழக்கும். சாப்பிட்ட உடன் சிந்திய உணவு துணுக்குகளை துடைத்து விட்டால் சுத்தமாகி விடும். இல்லாவிட்டால் உறைந்து போய் கறையை ஏற்படுத்தலாம். காபி,டீ சிந்துவதாலும் கறை தோன்றலாம்.


பர்னிச்சர்களில் அன்றாடம் படிவது தூசுகள் தான். இவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யாவிட்டால் அவை அழுக்காக படிந்து விடும். அழுக்குகளை நீக்குவது எளிது தான் என்றாலும் தினசரி செய்ய முடியாததால் அவை பர்னிச்சர்களின் அழகை பாழாக்கும். அழுக்குகளை சுத்தம் செய்ய பாலிஷ்ஸ்ப்ரே தெளித்து சுத்தமான துணியால் பர்னிச்சர் முழுதும் துடைக்கவும்.

கரைகளை விட சிராய்ப்புகள் பர்னிச்சர்களின் அழகை அதிகமாக சிதைக்கிறது. குழந்தைகள் விளையாடுவதுபொருட்களை வைத்து எடுப்பதுஇடம் பெயர்த்துவது போன்றவற்றால் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. முட்டை மஞ்சள் கருவுடன் சிறிது வினிகர் சேர்த்து பசை போல் ஆக்கி சிராய்ப்பில் பூசிவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு துடைத்து விடுங்கள் சிராய்ப்பு மறைந்து விடும். மெழுகையும் தேய்க்கலாம்.

ஆழமான சிராய்ப்புகளை வாதுமை கொட்டைகளை கொண்டு சரி செய்யலாம். பள்ளத்தின் அளவுக்கேற்ப வாதுமை கொட்டையை நறுக்கி அதில் அழுத்திவிட்டுசீராக உரசி விடுவதன் மூலம் சரிப்படுத்தி விடலாம். வெட்டுக்காயம்போல் ஏற்ப்பட்டுள்ள சேதங்களில் இன்ஸ்டன்ட் காபி பவுடரை’ சிறிது நீருடன் சேர்த்து பேஸ்ட் பதத்தில் எடுத்து பூசி சரி செய்யலாம். ஆனால் இது கருப்பு நிற பர்னிச்சர்களுக்குத்தான் நன்றாக இருக்கும்.

சேர்கள் நன்றாக இருந்தும் கால்கள் பழுதுபட்டால் பயனற்று போய் விடும். இருக்கையின் கால்கள் தேய்ந்து அல்லது உடைந்து போயிருந்தால் ரப்பர் தக்கையை அல்லது கடல்நுரையை பயன்படுத்தி நிற்க வைக்க முயற்சிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட வைக்கும் பசை கூட விற்பனைக்கு கிடைக்கிறது. அவற்றை வாங்கி உடைந்த துண்டுகளை அல்லது ரப்பர் தக்கைகளை ஒட்டி வைத்து பயன்படுத்தலாம்.

அடிக்கடி முற்றம் அல்லது தோட்டத்திற்கு எடுத்துச்சென்று பயன்படுத்தும் இருக்கையின் கால்கள் அதிகம் தேய்மானத்தை சந்திக்கும். அதன் கால்களில் சிறிய பிளாஸ்டிக் அல்லது தகர தக்கையை பொருத்தி தேய்மானத்தை குறைக்கலாம். இதனால் சேர்களை இழுத்துக்கொண்டு சென்றாலும் ஒன்றும் ஆகாது. பாலிஷ் செய்யும்போது கீழே பழைய சாக்கை விரித்துக் கொண்டால் வடியும் வார்னிஷை உறிஞ்சி விடும்.

சேர்கள் சுவர் ஓரமாக போடப்பட்டு இருக்கும்போது சுவரில் உரசலாம். அதேபோல அதில் அமருபவர்கள் சுவரில் சாய்வதால் எண்ணெய் கறை சுவரில் படியலாம். இதை தவிர்க்க ரப்பர் மெத்தைகளை வாங்கி தலைசாயும் இடம்இருக்கைகள் சுவரில் உரசும் பகுதிகளில் பொருத்தலாம். பர்னிச்சர் பாலிஷை அகற்ற வினிகருடன் பாதியளவு தண்ணீர் சேர்த்து துடைக்கவும்.



.

No comments:

Post a Comment