Monday, September 15, 2014

இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்

இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்

Valntavan a man without the disease. But today in the practice manitanota life together has become essential that the disease
ஒரு காலத்தில் நோய் இல்லாமல் வாழ்ந்தவன் மனிதன். ஆனால் இன்றைக்குள்ள நடைமுறையில் மனிதனோட வாழ்வில் நோய் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் வயது பாரபட்சம் இன்றி வரும் நோய் இதயத்தில் ஏற்படும் நோய் தான். இதை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதயத்தின் வால்வுகளில் ஏற்படுவது மற்றும் இதய தசைகளில் ஏற்படும் பிரச்னை.

இதில் இதய தசைகளில் உருவாகும் பிரச்னை காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்கம். இதுபோன்ற பிரச்னைகளை உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்தல், முறையான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் 90 சதவீதம் கட்டுப்படுத்தலாம். இதயத்தின் தசைகளுக்கு ரத்தம் சரிவர செல்லவில்லை என்றால் நெஞ்சு வலியும், இதயத்தின் உட்பகுதி மற்றும் விரல்களின் நுனிப்பகுதி ஆகிய பாகங்களில் அதிக வலி ஏற்படும். 

இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதனால் 35 வயது கடந்தவர் என்றால் அவர்கள் இதய நோய் குறித்து மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்.

இதய கோளறுகள் ஏற்பட இரண்டு காரணங்கள்
:

1. பரம்பரையாக வருவது.
2. நடைமுறை வாழ்க்கை முறை காரணமாக நவீன வாழ்க்கை முறையில் வாகனங்களை பயன்படுத்துவதால் நடைபயிற்சி என்பது குறைந்து விட்டது. இதனால் உடலில் சேரும் தேவையில்லாத கலோரிகள் சரியாக எரிக்கப்படுவதில்லை.

உணவில் கவனம் தேவை:


இதய நலன் காக்க உணவு முறையில் கவனம் தேவை. காலை உணவை தவிர்க்கவே கூடாது. மற்றபடி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது. வேக வைத்த நார்ச்சத்து உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருப்பது முக்கியம். பழங்கல் பல வகைகளில் நம் உடலுக்கு நன்மை அளிப்பதால் அதை நாம் தினமும் சாப்பிடுவது நல்லது.

உட்காந்தபடியே பணிகளை செய்வது உடலுக்கு நல்லது அல்ல. உடலுக்கு அசைவும், இயக்கமும் அடிக்கடி தேவை. காலை, மாலையில் 40 நிமிடங்கள் நடப்பது அல்லது ஒரு வேளையாவது நடப்பது நல்லது. வாரத்தில் 5 நாட்களுக்கு தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தேவை. இதுபோன்ற சூழ்நிலை மனதை மென்மையாக வைத்து கொள்ளும்.

சிகிச்சை என்ன?


இதய பிரச்னை உள்ளவர்கள் அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அக்குபஞ்சர் சிகிச்சை முறை முதலில் பிரதானமாக இதயத்திலிருந்து தொடங்கப்பட்டு பிறகு உள்பாகங்களில் பரவி, கைகள் மூலம் விரல்களின் முனைகளில் முடிவடைகிறது. அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை பெறும் நபர் வேறு இதய கோளாறுகள் வராமல் தங்களை பாதுகாத்து கொள்ளலாம். சரியான புள்ளியை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதால், இதய தசைகளுக்கு ரத்தம் சீராக செல்லும். இதனால் வலி, வேதனையில் இருந்து விடுபடலாம். மேலும் உண்ணும் உணவும் எளிதில் செரிமானம் ஆகும். இதன் மூலம் ஒருவரின் வாழ்நாள் அதிகரிக்கும்.



No comments:

Post a Comment