Friday, September 12, 2014

துரத்தும் முதுமை! இளமையை காக்க சில வழிகள்!!

புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து மீள, பருத்தி ஆடைகள் அணியலாம். சருமத்தை மறைக்கக்கூடிய க்ளோஸ் நெக், முழுக்கை ஆடைகளையும் பயன்படுத்தலாம்.

தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். மோர், பழச்சாறு அல்லது இளநீர் குடிக்கலாம்.

'ஆன்டி ஆக்ஸிடன்ட்’ நிறைந்த மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, பச்சை நிறக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் தோலின் இளமையைத் தக்கவைக்கலாம்.

வெண்ணெய், சீஸ், சாக்லேட், கேக், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ரசாயனம் அதிகம் இல்லாத சோப், ஷாம்பூக்களை பயன்படுத்தவேண்டும். பகல்வேளையில், நம் உடலில் வெளியே தெரியும் பகுதிகளில், எஸ்.பி.எஃப்.25 (Sun Protection Factor 25) உள்ள 'சன் ஸ்கிரீன்’ லோஷனை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை தடவிக்கொள்ளலாம்.

கடுமையான ரசாயனப் பொருட்கள் கலந்த டிடெர்ஜென்ட், சோப்களைப் பயன்படுத்தக்கூடாது. தவிர்க்க முடியாதபட்சத்தில், கையுறை அணிவது நல்லது.

தினமும் இரண்டு வேளை குளிக்கவேண்டும். அதில் ஒருமுறையாவது தலைக்குக் குளிக்க வேண்டும்.

வியர்வையினால், உடலில் துர்நாற்றம், பொடுகு, பூஞ்சைக் காளான் போன்ற நோய்த்தொற்று ஏற்படும்.
வறண்ட சருமத்தினர் குளித்ததும் கட்டாயம் நல்ல தரமான மாய்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரத் தூக்கம் கட்டாயம் தேவை. சீரான கால அளவு தூங்கும்போது, உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும்.

முக்கியமாக, தோல் வளமாக இருக்கத் தேவையான 'குரோத் ஹார்மோன்’, அதிலிருந்து சுரக்கும் கொலாஜன், ஹையலூரானிக் ஆசிட் (Collagen & Hyaluronic acid) போன்றவற்றின் சுரப்பு நன்றாக இருக்கும். அதனால் தோல் சுருக்கம் அடையாது.

சத்தான உணவு, போதிய தூக்கம், 'போதும்’ என்ற மனம்... இவையே சுருக்கங்கள் அற்ற, இளமையான சருமத்தின் எளிய ஃபார்முலா!''
Photo: துரத்தும் முதுமை! இளமையை காக்க சில வழிகள்!!

No comments:

Post a Comment