Friday, September 12, 2014

குட்டீஸ் பராமரிப்பு! விளையாட என்ன கொடுக்கலாம்!

மூன்றரை வயதுக்கு உட்பட்ட எந்தக் குழந்தையின் கையில் ஒரு பொருளைக் கொடுத்தாலும், அதை வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும். அதனால், காரீயம் கலந்த வர்ணம் பூசப்பட்ட பொம்மைகள், கையால் தொட்டாலே சாயம் ஒட்டிக்கொள்ளும் பொம்மைகள் மற்றும் பெயின்ட் எளிதில் உரிந்து வரும் நிலையில் இருக்கும்

பொம்மைகளை குழந்தைகளிடம் கொடுக்கவே கூடாது. காரீயம், காட்மியம், பாதரசம் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் செய்யப்பட்ட பொம்மை என்றால் 'CE’ என்ற அடையாளக்குறி அதில் அச்சிடப்பட்டிருக்கும்.
இத்தகைய பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம்.

கார் டயர் போன்று தனித் தனியாக பிரிந்து வரும் நிலையில் உள்ள பொம்மைகளும் ஆபத்துதான். ஏனெனில், குழந்தைகள் அதில் இருக்கும் சின்ன ஸ்க்ரூ அல்லது பாகங்களை வாயில்போட்டு விழுங்கிவிடும் அபாயம் உள்ளது. அதேபோல கோலி குண்டுகளை குழந்தைகளிடம் கொடுக்கக் கூடாது.

டெலிபோன் ஒயர் மற்றும் கயிறு போன்ற பொம்மைப் பொருட்களை வைத்து விளையாடும்போது, குழந்தைகள் அதைக் கழுத்தில் சுற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

குழந்தைகளின் மனதில் வன்முறையைத் தூண்டும் துப்பாக்கிப் பொம்மைகளையும் தவிர்க்க வேண்டும்.

கூர்மையான முனைகள் இல்லாத பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம்.

வண்ணம் பூசப்படாத பாரம்பரியமான மரப்பாச்சி பொம்மைகள், பனை ஓலைப் பொம்மைகளும் ஓ.கே!
Photo: குட்டீஸ் பராமரிப்பு! விளையாட என்ன கொடுக்கலாம்!

No comments:

Post a Comment