Friday, September 12, 2014

கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய வழிகள்!


கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய வழிகள்!

உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள்,சமையலறையில் உள்ள ஷெல்ப், கேபினட் மற்றும் சின்க் போன்ற இங்களில் தான் மறைந்து கொள்ளும்.
இப்படி வீட்டில் கரப்பான் பூச்சியுடன் தங்கியிருந்தால், நோய் கூட விருந்தாளிப் போல் வந்துவிடும். ஆகவே பலர் கரப்பான் பூச்சியை அழிக்க கடைகளில் விற்கப்படும் பல்வேறு ஸ்ப்ரேக்களை பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவை மீண்டும் மீண்டும் தான் வரும். ஆனால் கரப்பான் பூச்சி எப்போதுமே வீட்டில் வராமல் இருக்க வேண்டுமானால், வீட்டுச் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே விரட்டுவதோடு, அழிக்கவும் செய்யலாம்.
சரி, இப்போது கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுதலை தரும் அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா.

சர்க்கரை
சர்க்கரையை வைத்து கரப்பான் பூச்சியை அழிக்கலாம். அதற்கு சர்க்கரையை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது போரிக் ஆசிட் பவுடரைப் போட்டு கலந்து, கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் வெளிப்படையாக வைத்தால், அதை சாப்பிட்டுவிட்டு, இறந்துவிடும்.

முட்டை ஓடுகள்
முட்டையின் ஓடுகள் கரப்பான் பூச்சிக்கு எதிரி. முட்டையின் ஓட்டை ஷெல்ப் மற்றும் கேபினட்டின் மூலைகளில் வைத்துவிட்டால், அதன் நாற்றத்திற்கு கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.

கிராம்பு
கிராம்பு ஒரு வகையான காரமான பொருள். இதனை குழம்பு, கிரேவி மற்றும் ஹெர்பல் டீ போன்றவற்றில் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த நாற்றத்திற்கும் கரப்பான் பூச்சிகள் நிச்சயம் வராது. அதற்கு சிறிது கிராம்பை ஏதேனும் ஒரு டப்பாவின் பக்கத்தில் வைத்துவிட்டால், அதனை தீண்டாமல் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மாற்றி மாற்றி வைத்து வந்தால், நாளடைவில் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்.

போராக்ஸ் பவுடர்
வீட்டில் உள்ள பூச்சிகளை அழிக்க போராக்ஸ் பவுடரைத் தான் பயன்படுத்துவோம். ஆகவே அளவுக்கு அதிகமான அளவில் கரப்பான் பூச்சி இருந்தால், இரவில் படுக்கும் முன் இந்த பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டும். அதுவே 2-4 கரப்பான் பூச்சிகள் இருந்தால், அந்த பவுடரை லேசாக தூவி விடலாம். ஆனால் இந்த பவுடர் போய்விட்டால், கரப்பான் பூச்சி மறுபடியும் வந்துவிடும். ஆகவே 15 நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்.

பேக்கிங் சோடா
ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதனை கேபினட்டில் வைத்து, கேபினட்டை மூடி விட வேண்டும். ஆனால் 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் அதன் வாசனை போய்விடும். மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை கிச்சனை சுத்தம் செய்தால் நல்லது.


<One more method is also successful...try this also: Take one spoon sugar in a bowl, add one teaspoon of milk powder, one teaspoon of atta or wheat powder and one teaspoon of boric powder ( normally used in the carom board).....make a paste by adding little water......Put this paste here and there in the house and in the kitchen too....within a short span of time, within weeks all cockroach will die..,,,,,try this ......last somany years we have been following this method..>

No comments:

Post a Comment