Wednesday, November 5, 2014

குழந்தை பற்களும், அதன் பராமரிப்புகளும்

குழந்தை பற்களும், அதன் பராமரிப்புகளும் – Child Dental Care
குழந்தைகளின் பற்களைப்பற்றி…..
குழந்தைகளுக்கு பால் பற்கள் (Milk teeth) பொதுவாக வயது 6 மாதங்கள் ஈறுகளில் வெளிப்படும். இது ஒவ்வொறு குழந்தைகள் மத்தியில் வேறுப்படும், என்றாலும் 20 பால் பற்கள் அனைத்தும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகளுக்கு இடையில் வர வேண்டும். உங்கள் குழந்தை 6 மற்றும் 11 வயது வரையிலான கட்டத்தில் தான் அவர்களின் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் (Permanent teeth) வரும். 20 பால் பற்கள் விழுந்து 20 நிரந்தர பற்கள் வருவதுமில்லாமல் புதிதாக 12 கடைவாய் பற்கள் (Molar teeth) வரும் ஆக மொத்தம் 32 நிரந்தர பற்கள் (Permanent teeth). இதில் கடைசியாக வரும் permanent teeth தான் அறிவு பற்கள் (Wisdom teeth) என்பார்கள்.
கவனிக்கவேண்டியவைகள்:
# குழந்தையின் பற்கள் வருவதற்கே முன்பில் இருந்து பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் கவனிக்க வேண்டியவைகளில் முக்கியமானது, பெரும்பாலும் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் கரண்டி, spoon, மற்றும் மற்ற பாத்திரங்கள் இவைகள் சுத்தமாகவும், பாக்டீரியா போன்ற கிருமிகள் இல்லாத பொருட்களையே பயன்படுத்தவேண்டும்.
# குழந்தை இரவில் தூங்கக்கூடிய நேரத்தில் பால் பாட்டில், பழச்சாறு பாட்டில் அல்லது சர்க்கரை கொண்டிருக்கும் மற்ற தயாரிப்பு கொண்டுள்ள பொருட்களாக சாக்லேட், Candy போன்ற பொருட்களுடன் உங்கள் குழந்தை படுக்க போடாதீர்கள். இந்த திரவங்கள் உள்ள சர்க்கரை மற்றும் அமிலங்கள் பற்சிதைவு (Dental decay) உண்டாக்கும். குழந்தை 6 மாதங்களாக இருக்கும் போதே கப் வைத்து குடிநீர் தொடங்க உங்கள் குழந்தையை ஊக்குவிங்கள். பிறகு 1 அல்லது 1 1/2 வயது இவரும் பொழுது பிற பால் மற்றும் Liquid பொருட்களை தருலாம்.
# மேலை நாட்டில் Public water fluoridation, school water fluoridation உள்ளது. நம்மிடம் ஆர்வம் இருந்தால் உங்கள் பல் மருத்தவரிடம் கேட்டு Systemic fluoridation செய்யலாம். இல்லை என்ற பற்கள் வந்த பிறகு Topical fluoride treatment செய்யலாம்.
# உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தாருங்கள். இது ஆரோக்கியமான ஈறுகளுக்கும், வலுவான பற்கள் உருவாக்கும், மற்றும் பல் சிதைவு தவிர்க்கும். இச்சத்தான உணவுகள் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவை இருக்கிறது. சர்க்கரை மற்றும் கேக், பாஸ்தா, வெள்ளை ரொட்டி போன்ற பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
# ஆல்கஹால் உள்ள mouthwashes உங்கள் குழந்தைக்கு கொடுக்க கூடாது. உங்கள் குழந்தை 6 வயதான பிறகு பல் சிதைவு (Dental decay) , பல் துவாரங்கள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு பல் மருத்துவரின் ஆலோசனை பெயரில் ஃப்ளோரைடு (Fluoride) உள்ள Mouthwash கொண்டு வாயை கழுவலாம். ஆனால் உங்கள் குழந்தை அதை விழுங்காமல் இருக்க மேற்பார்வையிட வேண்டும்.
# சிகரெட் புகை (இரண்டாம்நிலை புகைபிடித்தலை) இவற்றை சார்ந்த புகையிலை விஷயங்களிடம் இருந்து உங்கள் குழந்தை தள்ளி வையுங்கள். இரண்டாம் நிலை புகை என்பது புகைப்பிடிக்கிறவர்களிடம் இருந்து கிடைக்கும் புகை. புகையிலையின் புகை பற்சிதைவு மற்றும் பல நோய்களுக்கு காரணமானது. இவற்றின் ஆபத்துகளை சிறுவயது முதல் நம் குழந்தைகளுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.
# நம் குழந்தைகள் விளையாடும் சமயங்களில் பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். அப்படி எதாவது பிரச்சனை வந்தால் உடனே பல் மருத்துவரை அனுகவும்.
# உங்கள் குழந்தை தனது விரல்கள் மற்றும் கட்டை விரலை (Thumb sucking habit) சப்புகிறானா? என ஆரம்பம் முதலே கவனிக்க வேண்டும். செய்கிறான், என்றால் உடனே அதை நிறுத்த முயற்சிசெய்யவேண்டும். குழந்தை நிறுத்தவில்லை என்றால் உடனே உங்கள் பல் மருத்துவரை பார்க்க வேண்டும்.
# பற்கள் துலக்குதல் (Tooth Brushing for kids) :
குழந்தையின் எப்பொழுது பற்கள் வெளிப்படுகிறதோ அக்கால கட்டத்திலிருந்து சுமார் 2 1/2 வயது அல்லது 3 வயது வரை மென்மையான துணி அல்லது Gauge Pad (இது பார்மஸியில் கிடைக்கும்) இவற்றைக்கொண்டு குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இவர்கள் தான் குழந்தையின் பற்களையும், ஈறு மேடுகளையும் சுத்தம் செய்யவேண்டும். இவ்வயதில் இருந்தே நம் குழந்தையின் Oral Hygiene பற்றி கவலைப்படவேண்டும். பல் விலக்கவேண்டும் என நிர்ப்பந்திக்ககூடாது.
பிறகு 3 வயதாகும் பொழுது மென்மையான டூத் ப்ரஸை (Soft kids tooth brush) மற்றும் Kids டூத் பேஸ்ட் ( Kids tooth paste) வைக்கொண்டு பெற் றோர்கள் தாங்கள் குழந்தைகளுக்கு பற்களை காலையிலும், இரவிலும் துலக்க ( Teeth brushing) வேண்டும் மேலும் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். இவ்வாறு 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் செய்த பிறகு குழந்தையின் நான்கு வயது முதல் காலை நேரங்கள் குழந்தை அவர்களாகவே பற்களை துலக்க (Brushing) செய்யக்கூறலவேண்டும். சில மாதம் இரவில் பெற்றோர் தன் குழந்தைக்கு Brushing செய்யனும். இவ்வாறாக Step by step செய்தால் எந்த குழந்தையும் பற்களை விலக்க Brushing செய்ய பிரச்சனை செய்ய மாட்டார்கள்.
# பல் துலக்கிய ( Teeth brushing) பிறகு பற்களில் மீதி இருந்த பற்களின் அழுக்கு (Dental Plaque) அறிய Disclosing tablets மற்றும் Chewing gum (எல்லா மருந்துக்கடையிலும் உள்ளது) வாங்கி குழந்தைகளின் பல் துலக்குவதை கண்காணிக்கலாம்.
இங்கணம்
டாக்டர்.யூசுப் ஆதம்.
சார்ஜா – UAE
contact: 00971 55 2340934

No comments:

Post a Comment