Sunday, November 9, 2014

மாடுகளின் வயதை ....!!!

-•மாடுகளின் வயதை அதன் கீழ்த் தாடையிலுள்ள 
எட்டு நிரந்தர முன் வரிசைப் பற்களின் வளர்ச்சியை 
வைத்து கணக்கிடலாம்.
-
•மாடுகளில் நிரந்தரப் பற்களாக் கீழ்தாடையில் 
4 ஜோடி அதவாது 8 முன் வரிசைப்பற்கள் இருக்கும், 
மேல் தாடையில் முன் வரிசைப்பற்கள் இருக்காது.
-
•பொதுவாக கலப்பின மாடுகளில்
---
•2 வருட வயதில் மத்திய ஜோடி நிரந்தர முன் 
வரிசைப் பற்கள் முளைக்கும்.
-
•2 1/2 வருட வயதில் இரண்டாவது ஜோடி நிரந்தர 
முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.
-
•3 வருட வயதில் 3 வது ஜோடி பற்களும்
-
•3 1/2 – 4 வருட வயதில் கடைசி ஜோடி நிரந்தர 
முன்வரிசைப் பற்களும் முளைத்து விடும்.
-
•6 வருட வயதில் இருந்து இப்பற்கள் தேய ஆரம்பிக்கும்.
-
•10 வயது ஆகும் போது எல்லா முன்பற்களுமே தேய்ந்த 
நிலையில் இருக்கும்.

No comments:

Post a Comment