Sunday, November 30, 2014

இளைத்த உடலை தேற்ற நெருஞ்சில் கஞ்சி

இளைத்த உடலை தேற்ற நெருஞ்சில் கஞ்சி .

நெருஞ்சில் கஞ்சி

தேவையானவை: காய்ந்த நெருஞ்சில் - ஒரு கைப்பிடி, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், நொய்யரிசி - கால் கிலோ, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: நெருஞ்சில், சோம்பு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தமான, பயன்படுத்தாத வெள்ளைப் பருத்தித் துணியில் முடிந்துகொள்ளவும். நொய்யரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில் இந்த மூட்டையைப் போடவும். மூட்டை அவிழ்ந்துவிடாதபடி இறுக்கமாகக் கட்ட வேண்டியது அவசியம். அரிசி நன்றாகக் கொதித்துக் கஞ்சிப் பதத்திற்கு வரும்போது, மூட்டையை வெளியே எடுத்துவிட வேண்டும். அதில் உள்ள சாறு கஞ்சியில் இறங்கி இருக்கும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாட்டினின் அளவை முறைப்படுத்தும். சிறுநீரகச் செயல் இழப்பைத் தடுக்கும். சிறுநீரில் வெளிய£கும் யூரிக் அமிலம், அல்புமின், புரதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இளைத்த உடலைத் தேற்றும்.
Photo: இளைத்த உடலை தேற்ற நெருஞ்சில் கஞ்சி .

No comments:

Post a Comment