Sunday, November 30, 2014

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் வாழைப்பூ

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் வாழைப்பூ

புளிப்பு, தித்திப்பு என்று நாக்கை சப்புக்கொட்டிச் சாப்பிடுகிறோம். வாரம் ஒரு முறையேனும் வாழைப் பூவை சமைத்து சாப்பிடும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது. அப்படியே சமைத்தாலும், துவர்ப்பு சுவை இருக்கக்கூடாது என்பதற்காக, வாழைப் பூவை அலசி, தண்ணீர்விட்டு நன்றாக பிழிந்துவிடுகிறோம். எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை துவர்ப்புச் சுவையான வாழைப்பூவுக்கு தான் உண்டு. வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் இந்த தருணத்தில், வாரம் ஒருநாள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவது ரொம்பவே நல்லது.
மாதவிடாயின்போது, பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். ஆண்மை விருத்திக்கும் நல்லது.

வாழைப்பூ பருப்பு உசிலி ரெசிப்பி
வாழைப்பூ மடலை பிரித்து, பூவின் நடுவில் உள்ள காம்பினை அகற்றி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4 காய்ந்த மிளகாய், ஒரு கப் கடலைப்பருப்பை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் தண்ணீர் அதிகம் விடாமல் அரைத்து, குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். இதில், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய வாழைப்பூவை போட்டு நன்றாக வெந்ததும், வேக வைத்தக் கடலைப்பருப்பை போட்டு அடுப்பை சிம்-ல் வைத்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
Photo: உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் வாழைப்பூ   

No comments:

Post a Comment