Thursday, July 24, 2014

அழகு... அவசியம்!

Beauty ... is necessary!
இனிய இல்லம்: தமிழினி

தோட்டமென்பது இயற்கைத் தூரிகையால் வரையப்பட்ட லாண்ட்ஸ்கேப்பிங் ஓவியமே! - வில்லியம் கென்ட்

‘‘சார்... நல்லாயிருக்குறீங்களா? நம்ம செடிகள்லாம் எப்படி இருக்குதுங்க? நல்லா கவனிச்சிக்கோங்க சார்...’’ - க்ரெஷ்ஷில் குழந்தைகளை விட்டுவிட்டுப்போன தகப்பனைப் போலவே, தான் நட்டுவிட்டுப்போன செடிகளைக் குறித்து வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் விசாரிக்கிறார், கரூரில் ‘கிரீன் லேண்ட் கார்டன்’ லாண்ட்ஸ்கேப்பிங் தோட்டக்கலை நிறுவனத்தை நடத்துகிற மணிமாறன். இவர் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் ‘டிப்ளமோ இன் லாண்ட்ஸ்கேப்பிங்’ படித்திருக்கிறார். உலகின் பார்வையில் மட்டுமே அவர் ஒரு லாண்ட்ஸ்கேப்பிஸ்ட்... அவர் உருவாக்கும் தோட்டங்களைப் பொறுத்த வரை அவர் ஒரு தாயுமானவன்... தந்தையுமானவன்! அத்தகைய ஒரு உணர்வு பந்தத்தையே அவர் செடிகளுடன் உருவாக்கி வைத்திருக்கிறார்! அவரோடு ஓர் உரையாடல்...

‘‘என்னது செடிகளைக் குறித்து நலம் விசாரிப்பீங்களா?’’


‘‘ஆமாங்க... வீட்டின் உள்ளே உள்ள உயிர்களைப் போலவே, இவங்க வீட்டின் வெளியே உள்ள உயிர்கள்னுதான் நான் நெனைப்பேனுங்க...’’ 

‘‘தோட்டக்கலையில் எத்தனை வகை?’’


‘‘நிறைய வகைகள், நிறைய பாணிகள் இருந்தாலும் பொதுவாக ஃபார்மல் கார்டனிங், இன்ஃபார்மல் கார்டனிங் என அடக்கி விடலாம்... 500 சதுரடி இடம் இருக்குதுன்னு வச்சிக்குவோம். அதை இரு 250 அடிகளாக பிரித்துக்கொண்டு, எதிரெதிராக ஒரே வகைச் செடிகளை வைப்பதை ஃபார்மல் கார்டனிங்னு சொல்றோம். உதாரணத்துக்கு... நடைபாதையின் அந்தப்பக்கம் ஒரு ‘ராயல் பாம்’ நட்டிருந்தால், இந்தப் பக்கமும் ஒரு ராயல் பாம் நடுவது... வலது பக்கம் ஒரு குரோட்டன்ஸ் செடி எனில், இடது பக்கமும் அதே வகை குரோட்டன்ஸ் நடுவது. தோட்டத்தில் ஒரு ஒத்திசைவை - ஒரு ஒழுங்கைக் கொண்டு வருவதே இதன் அடிப்படை. இந்த முறையை பெரும்பாலும் வணிக கட்டிடங்களிலேயே காண முடிகிறது. இருந்தாலும், ‘சிறிய நடைபாதையின் இருமருங்கும் மட்டுமே செடிகள் வைக்க இடமிருக்கு’ என்பவர்கள் கூட இதைக் கடைப்பிடிக்கலாம். இதில் செடிகள் அனைத்தும் சமதளத்திலேயே நடப்படுகின்றன...’’

‘‘இன்ஃபார்மல் கார்டனிங் என்றால் என்ன?’’


‘‘இன்ஃபார்மல் கார்டனிங் என்பது ஃபார்மல் கார்டனிங்கிலிருந்து முற்றிலுமாக மாறுபடுகிறது. ஃபார்மல் கார்டனிங்குக்கு சில இலக்கணங்கள் உண்டு. ஆனால், எந்த இலக்கணங்களுக்கும் கற்பனை வரையறைகளுக்கும் உட்படாத ஒரு தோட்ட வடிவமைப்பே இந்த இன்ஃபார்மல் கார்டனிங். மேடுகள், பள்ளங்கள், சமதளங்கள் எனப் பலவகையான நில அமைப்பு வகைகளையும், கூழாங்கற்கள், கற்சிற்பங்கள், ஊஞ்சல்கள், சிறு ஓடைகள், நீரூற்றுகள், சிறு பாலங்கள், இருக்கைகள், பெர்கோலாக்கள், குடில்கள் உள்பட பல வகை பொருட்கள் மற்றும் அமைப்புகளுடனும், கூடவே கட்டிடக்கலை அம்சங்களுடன் ரசனையான கலவையாக அமைப்பதுதான் இன்ஃபார்மல் தோட்டக்கலை! இவை ஷ்ணீtமீக்ஷீ தீஷீபீவீமீs (நீர்நிலைகள்) மற்றும்   க்ஷீஷீநீளீ ணீஸீபீ ஜீமீதீதீறீமீ தீமீபீகளையும் உள்ளடக்கியவை. தண்ணீர் சதா சலசலவென ஓடிக்கொண்டே இருக்கும் இத்தகைய தோட்ட அமைப்புகளில்!’’

‘‘நாம் ஏற்கனவே அறிந்த தோட்டக்கலைக்கும் லாண்ட்ஸ்கேப்பிங்குக்கும் என்ன வித்தியாசம்?’’


‘‘இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தோட்டக்கலை என்பது செடி வளர்ப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் பராமரிப்பதும் மட்டுமே. லாண்ட்ஸ்கேப்பிங் என்பது சிவில் கான்செப்ட்களையும் உள்ளடக்கியது. நம் வீட்டின் தன்மையை மனதில் கொண்டே லாண்ட்ஸ்கேப்பிங் செய்யப்படுகிறது. செடிகளையும் மரங்களையும் மட்டுமே கொண்டிருக்காமல், பலவகையான வடிவமைப்புகளையும் பொருட்களின் பயன்பாட்டையும் கொண்டது இது. செடிகளை மட்டுமன்றி பொருட்களையும் விதைத்து விளைச்சலெடுக்கும் ஒரு அற்புதமே இந்த லாண்ட்ஸ் கேப்பிங்!’’

‘‘ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் அல்லது பழைய வீடுகளின் தோட்டங்களில் லாண்ட்ஸ்கேப்பிங் என்ன வகையான மாற்றங்களை கொண்டு வருகிறது?’’


‘‘சிவில் கான்செப்ட்டுடன் கூடிய இத்தகைய தோட்ட அமைப்பினால் நம் வீட்டுக்கு ஒரு ஃபேஸ்லிஃப்ட்டும் புத்துணர்வும் கிடைக்கிறது. ஒரு வீட்டின் பார்வையை லாண்ட்ஸ்கேப்பிங் அப்படியே முழுவதுமாக புரட்டிப் போட்டு விடுவதும் உண்டு. வீடுகளில் உள்ள சில குறைகளையும் மதிற்சுவர் மற்றும் வீடுகளில் உள்ள வண்ணங்களின் குறைபாடுகளையும் கூட இது செப்பனிட்டுவிடும். போர்டிகோ முதலிய இடங்களை மேலும் அழகு படுத்திக் காட்டுவதோடு, சிறிய வீடுகளை மிகப் பெரிய வீடுகளாகக் காட்சிப்படுத்தவும் இதனால் முடியும். மொத்தத்தில், நம் கட்டிடத்தில் உள்ள சில தவறுகளைக்கூட லாண்ட்ஸ்கேப்பிங் யுக்திகள் கொண்டு மறைக்க இயலும்...’’  

‘‘ஒரு கன்னி நிலத்தை லாண்ட்ஸ்கேப்பிங் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டி யவை?’’


‘‘எந்த வகையான தோட்டம் எனினும், நாம் 4 விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 1. நிலம் 2. மண் 3. நீர்  4. தட்பவெப்ப நிலை.
இவை அனைத்தும் மிகச்சரியாக அமைந்திருப்பின் மிகச்சிறந்த தோட்டத்தை அமைக்க முடியும். தோட்டம் அமைப்பதற்கான போதிய இடவசதி, நீரின்   ஜீலீ யீணீநீtஷீக்ஷீ 7.5 - 8.5க்குள் இருத்தல், சிவப்பு மண் கொண்டிருத்தல், செடிகளுக்கு உகந்த தட்ப வெப்பநிலை... இவை அமைந்தால் மிக ரம்மியமான தோட்டத்தை இயற்கையாகவே உருவாக்கிட முடியும். இல்லையென்றாலும், நமக்குத் தேவையான பொருட்களை நிலத்தில் கொட்டி அத்தகைய நிலத்தன்மையை செயற்கையாக உருவாக்கிட முடியும். நம்மால் முடியவில்லையா? ஒரு லாண்ட்ஸ் கேப்பிஸ்ட்டிடம் பணியை ஒப்படைத்தால், மிக எளிதாக மண்தன்மையை sணீஸீபீ பீuனீஜீவீஸீரீ செய்து மாற்றிக் கொடுத்து விடுவார்கள்...

மண் 

செடி நன்றாக வளர்வதற்கு மண்ணே அடிப்படை. நம் நிலத்து மண் வளமற்று இருப்பின், 2 பகுதி சிவப்பு மண்ணுக்கு ஒரு பகுதி துகள் மணல் என்கிற விகிதத்தில் மண் கலந்துகொண்டு, கூடவே மக்கிய குப்பை, மண்புழு உரம் (மண்புழு உரம் பயன்படுத்துகையில் களை அதிகம் வராது) போன்றவற்றையும் கலந்து கொள்ள வேண்டும். மக்கிய உரம் கிடைக்காதவர்கள் தனியார் நிறுவனங்கள் விற்கும் இது போன்ற இயற்கை உரங்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம். மண்ணை நன்றாகக் கொத்திவிட்டு, அதன்பின் அதனை நன்றாக கிளறிவிட்டு, நன்கு இளகவிட்டு அதன்பின் 
சமப்படுத்திக் கொள்ளலாம். 

நிலம்

போதிய இடவசதி இல்லை என கவலைப்பட வேண்டாம். இருக்கும் இடத்திலேயே மிக அழகாக லாண்ட்ஸ்கேப்பிங் செய்ய முடியும். 6 இன்ச் அகலம் கொண்ட நிலம் இருந்தால் கூட போதும்... அதிலும் சில வகை செடிகளை வளர்த்து விட முடியும். செடி நடுவதற்கு ஒரு அடி இடம் கூட இல்லையென்றாலும் பரவாயில்லை... மதிற்சுவர்களில் செடிகளுக்கான தொட்டிகளை (ஜீறீணீஸீtமீக்ஷீ தீஷீஜ்மீs) தொங்கவிட்டு செடிகளை வளர்க்கலாம்!

தட்பவெப்ப நிலை 


ரெட் வாக்ஸ் சீலிங் பாம்ஸ் எனும் ஒருவகைச் செடி பெங்களூரு மற்றும் கோவை பருவநிலைக்கு மட்டுமே நன்கு வளரும். மற்ற சில ஊர்களில் என்னதான் பராமரித்தாலும் வராது. அதனால் செடிகளை ‘நம்ம ஊரு’ தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போல தேர்வு செய்வது அவசியம். 

நீர்

நமது வீட்டு தீஷீக்ஷீமீலிருந்து  கிடைக்கும் நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருந்தால், உப்பு நீரில் வளராத சில வகை செடிகளை தவிர்த்து விடலாம். மாறாக நிறைய தொட்டிச் செடிகளை வளர்த்துக் கொள்ளலாம்.

(பழகுவோம்... படைப்போம்!)

No comments:

Post a Comment