Thursday, July 24, 2014

வெயிலுக்கு இதமா மண்பானை தண்ணீர் குடிக்கலாமே

The impact will be implemented veyilota atikariccu kitetan. The greater light to shine next month. Soft drink to escape from the sun

வெயிலோட தாக்கம் நாளுக்குநாள் அதிகரிச்சுக்கிடேதான் இருக்கு. அடுத்த மாதம் இன்னும் அதிமா வெயில் கொளுத்தும். இந்த வெயிலில் இருந்து  தப்பிக்க குளிர்பானம், ஜூஸ், பழங்கள், நுங்கு, பதனீர், தர்பூசணி, வெள்ளரின்னு குளிர்ச்சியானத சாப்பிட்டுகிட்டுதான் இருக்கோம். என்னதான்  சாப்பிட்டாலும், குடிச்சாலும் இந்த வெயிலுக்கு தண்ணீர்தான் அதிகமா குடிக்க வேண்டியிருக்கு.

இந்த நேரத்தில தண்ணீர் குடிக்கிறதும் உடலுக்கு ரொம்ப நல்லது.  வெயில் காலத்துல தண்ணீர ஜில்லுன்னு குடிக்கணும்தான் ஆசப்படுவோம்.  அதனால பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற தண்ணீர், ஜில்லுன்னு வாட்டர் பாக்கெட் போன்றவற்ற குடிக்கிறோம். இது அவ்வளவு நல்லது கிடையாது. பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற அதிக ஜில் தண்ணிய குடிக்கிறதால ஜலதோஷம் பிடிக்கவும், தலைவலி வரவும் வாய்ப்பிருக்கு.

இதை தவிர்க்க இயற்கையா ஜில்லுன்னு இருக்கும் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். மண்பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும்,  சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை தரக்கூடியது. பல இடங்கள்ல குழாய் பொருத்திய மண்பானைகள் விற்கப்படுகின்றன. இந்த  மண்பானைகளை வாங்கி நாமும் பயன்பெறலாமே.

No comments:

Post a Comment