Thursday, July 24, 2014

தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:


*தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும் 

*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. 

ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

*ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:

*மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.

எப்போது தண்ணீர் குடிக்கலாம்:

*தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். 

*ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். 

*பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும். 

*கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். 

*எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும். 

*தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.

குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.

*தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க
*********************************************************************************************

தண்ணிர் குடிங்க எல்லாம் சரியாகிவிடும்...

*தண்ணி குடி எல்லாம் சரியாகிவிடும் இந்த வரிகளை கேட்காத வீடு இருக்காது. தண்ணீர் நம் வாழ்வோடு உள்ள ஒன்று நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க இயலாது. தண்ணீர் நாம் குடிக்க, குளிக்க நமது அன்றாட தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய உதவுகிறது. 

நமது உடலில் தண்ணீரின் பங்கு:

*ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். 

*ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

*தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம். 

*அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உபபொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. 

*அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. 

*அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். 

*உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும். 

*சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

*உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.

*தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க
********************************************************************************************

தண்ணீர் இல்லையேல் கண்ணீர்...

நம்மில் பலருக்கும் தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லறை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அநேகம்.

* தண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோருக்கும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது. உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும் (வியர்வை, சிறுநீர் வடிவத்தில்) தண்ணீர் இருந்தால் தான் முடியும் உடம்பின் வெப்பநிலையை (கோடையிலும்) சீராக பராமரிக்க தண்ணீர்தான் அவசியம்.

* போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

* விளையாட்டு வீரர்களுக்கு தசைச்சோர்வு ஏற்படவும் அவர்கள் திறமையை சரிவர வெளிக்காட்ட இயலாது போவதும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான். நாம் திரவபதார்த்தங்கள், பானங்கள் உட்கொள்கிறோம் என்பதற்காக ஒரேயடியாகவும் தண்ணீரை ஒதுக்கி விட முடியாது.

* மற்ற குளிர்பானங்களைப் போல் தண்ணீரில் செயற்கை நிறமூட்டியோ, மண மூட்டியோ கிடையாது. காபி, டீயில் காஃபின் என்ற நச்சுப் பொருள் பற் சொத்தைக்கு காரணமாகசர்க்கரை எல்லாம் உண்டு.

* தாகம் தணிக்க சிறந்தது எது? தண்ணீர் தான். உடற்பயிற்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, தண்ணீர் தான் உட்கொள்ள ஏற்றது. சில இன்சுவை பானங்கள் குடித்ததுமே தாகம் தணிவதாக உணர்கிறோம். 

* உண்மையில், அந்த பானங்கள் நம் தசைகளிலுள்ள ஈரப் பசையை நீராக்கி குடல் வழி செலுத்துகிறது. இதனால் உள்ளுக்குள் வறட்சிதான் விளைகிறது. நோயாளிகள் திட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது. 

* திரவரூபமாக உட்கொள்வது எளிது. அத்திரவ உணவுகள் சத்துக்களோடு, நீர்த்தன்மையும் கொண்டவை என்பதும் சவுகரியம் இயல்பான உடல்நலம் உள்ளவர்கள் தம்மால் முடிந்த அளவு தண்ணீரை குடிக்கலாம் அதில் கொழுப்பு (கயவ) இல்லை .

* நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது அவரவர் உடலமைப்பு, உணவுப் பழக்கம், வேலை, வாழ்கிற சீதோஷ்ண நிலை போன்ற அநேக விஷயங்களை பொறுத்தது.

* இந்தியா மாதிரி உஷ்ணப் பிரதேசத்தில் வசிக்கிறவர் உடம்பிலிருந்து நிறைய தண்ணீரை இழக்கிறார். ஈடு செய்ய வேண்டியவராகிறார். வாந்தி வயிற்றுப் போக்கின் போதும் நிறைய தண்ணீர் இழக்கப்படுகிறது.

* சுமார் 60 கிலோ எடையுள்ள ஒருவர் பத்து க்ளாஸ், திரவ ரூபமாக உட்கொள்ள வேண்டும். (ஒரு வேளைக்கல்ல ஒரு நாளைக்கு) அதில் முக்கால் வாசி தண்ணீராக இருக்க வேண்டும்.

* சிறுநீரின் நிறம் அடர்ந்து காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்து கொள்ளலாம். சிறுநீரக சம்பந்தமான பழுது இருதய கல்லீரல் கோளாறுள்ளவர்கள் தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உறுப்புகளின் அப்போதைய கழிவுகளை வெளியேற்றும் திறன் குறைந்திருக்கும். 

தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் பயக்கும்.
*******************************************************************************************

அதான் தண்ணீர் இருக்குல்ல..

தண்ணீரில் இருப்பவை: கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்பு, தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை.

* நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். 

* கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், "ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றோருக்கு உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து சோர்ந்து விடுவர்.

* தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று வேலைகளைச் செய்ய முடியும். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

* கோடையில் தினசரி குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய நீரைக் குடிப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம்.

* ஒரே நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு ஒரேயடியாக நிறைய தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டுபண்ணும்.

* வயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடன் படுப்பதும் தவறுதான். இவை எல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாய தவறுகள். 

* கோடையில் இரவில் இடைவெளிகளில் தண்ணீரைக் குடிப்பது நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலை தீர்க்கும். 

* பெரிய "மீட்டிங்' நடக்கும்போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம் அது ஒரு "மூடு ரிலாக்சன்ட்.' மனப் பதட்டத்தைக் குறைக்கும்.

மூளையின் வேதிப் பொருளை ஒழுங்குபடுத்தும் தண்ணீர் ஒரு உயிர் நீர்


|

No comments:

Post a Comment