Thursday, July 24, 2014

தூக்கம் A to Z


‘நல்ல சிரிப்பும் ஆழ்ந்த உறக்கமுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கான அடிப்படை மருந்துகள்’ என்கிறது ஒரு வெளிநாட்டுப் பழமொழி. ஆனால், ஆரோக்கியத்துக்கு அடிப்படையான அந்த தூக்கத்துக்கே நம்மில் பலருக்கு மருந்து தேவையாக இருக்கிறது. 

தினசரி தூக்கத்துக்கு மாத்திரைகள் சாப்பிடுவது, போதை கலந்த இருமல் மருந்து குடிப்பது, கொஞ்சமாக மது எடுத்துக் கொள்வது, வயிறு முட்ட முழு உணவு உண்பது என ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு ஆயுதம். வராத தூக்கத்தை எல்லாம் சேர்த்து வரவழைக்கிற இந்த எல்லா டெக்னிக்குமே, சில நாட்களில் செயலிழக்கும் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஒன்றுக்கு நான்காக மாத்திரைகள் உள்ளே போனாலும், பாட்டில் பாட்டிலாக மருந்தோ, மதுவோ குடித்தாலும் ஒரு கட்டத்தில் தூக்கம் நிரந்தரமாகத் தொலையத் தொடங்கும்.

தொலைவது தூக்கம் மட்டுமல்ல... ஆரோக்கியமும்தான். வருடக் கணக்கில் உள்ளே போன மருந்தும் மதுவும் அதற்குள் தன் வேலைகளைக் காட்ட ஆரம்பித்ததன் விளைவாக உங்கள் ஆயுளும் கொஞ்சம் குறைந்திருக்கும். இப்படி எந்த ஆபத்தும் இல்லாமல் தூக்கத்தை வரவழைக்க வழியே இல்லையா? ‘‘ரோமா தெரபி எனப்படுகிற வாசனை சிகிச்சையில் இருக்கிறது தீர்வு’’ என்கிறார் அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். வாசனைக்கும் தூக்கத்துக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்விக்கு அவர் சொல்கிற தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன.

‘‘தூக்கமின்மைக்கான முக்கிய காரணம் பட படப்பும் மனப்பதற்றமும். பள்ளிக்கூடச் சூழல், வேலையிடம், பொருளாதார சிக்கல், உறவுகளுக்கு இடையிலான பிரச்னைகள், உணர்வுரீதியான பிரச்னைகள், குழந்தைகள் சந்திக்கிற பாலியல் அத்துமீறல், அதைத் தொடர்ந்த பயம், திடீர் திடீரென மாறும் வானிலை, வேறு பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்கிற மருந்துகளின் பக்க விளைவுகள், அதிக காபி, டீ குடிக்கிற பழக்கம், சுவாசக் கோளாறு கள், உடலில் ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை குறைவு... இப்படி தூக்கமின்மையின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்.

நல்ல தூக்கத்தை வர வழைக்க மனமும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். மனதை அமைதிப்படுத்தும் இனிமையான சூழல், நல்ல இசைக்கு இணையாக நல்ல நறுமணங்களுக்கும் தூக்கத்தை வரவழைக்கிற குணம் உள்ளதை நிரூபித்திருக்கிறது அறிவியல். எத்தனையோ கவலைகளுடனும் பிரச்னைகளுடனும் கோயிலுக்குள்ளோ, தர்காவினுள்ளோ, சர்ச் உள்ளேயோ நுழைகிறோம். உள்ளே போனதும் அங்கே நம்மை ஈர்க்கிற பூ வாசமும், ஊதுபத்தி, சந்தனம், அத்தர் வாசமும் நம் கவலைகளை எல்லாம் மறக்கச் செய்து அமைதிப்படுத்துவதில்லையா? அதே மாதிரிதான் அரோமா தெரபியும். ஒரு நல்ல வாசனையை நுகரும் போது, மூக்கிலுள்ள சிலியா என்கிற ரோமங்கள்,

அதை உள்வாங்கி, ‘ஆல்ஃபேக்டரி சிஸ்டம்’ மூலம் மூளைக்கு அனுப்பும். மூளையிலுள்ள லிம்பிக் சிஸ்டம், அதை கிரகித்ததும் உடலுக்குக் கட்டளையிடும். அந்த வாசனையின் தன்மையைப் பொறுத்து உடலும், மனதும் உற்சாகமாகவோ, உறக்கத்துக்குத் தயாராகவோ செய்கிறது. தூக்கத்தை வரவழைப்பதில் அரோமா தெரபி செய்கிற அற்புதங்கள் எக்கச்சக்கம். தூக்கமின்மையால் தவிக்கிறவர்கள் அரோமாதெரபியை 3 வழிகளில் முயற்சி செய்யலாம்.

ச்டிஃப்யூசர் எனப்படுகிற கருவியின் மூலம், அரோமா தெரபியின் குணத்தை புகையாக வெளிவரச் செய்து பலன் பெறலாம். ச்அரோமாதெரபி ஆயில் கலந்த ரூம் ஸ்பிரே உபயோகிக்கலாம். ச்குளிக்கிற தண்ணீரில் அரோமா ஆயில்களை கலந்தும் தூக்கத்தைத் தழுவலாம். உகுழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஒரு வகையான காம்பினேஷனிலும், மற்றவர்களுக்கு வேறு காம்பினேஷனிலும் இந்த சிகிச்சை மாறுபடும்.

உகுழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ரோஸ், லேவண்டர், ஜாஸ்மின், ஜெரேனியம் மற்றும் ஸ்பைகினார்ட் கலவை. உநடுத்தர வயதினருக்கு சைப்ரஸ், ஸ்பைகினார்ட், நெரோலி, லேவண்டர் மற்றும் ரோஸ் ஓட்டோ கலவை. உடிஃப்யூசர் உபயோகிப்பது மிக அருமையான பலன் தரும். குடுவை போன்ற அந்தக் கருவியில் அடியில் அரோமா தெரபி மெழுகை ஏற்றி வைத்து விட்டு, மேல் பாகத்தில் தண்ணீர் விட்டு, அதில் இந்த எண்ணெய் கலவையிலிருந்து 5 துளிகள் விட வேண்டும். மெழுகுச் சூட்டில் தண்ணீர் சூடாகி, அந்தச் சூடு எண்ணெயில் பட்டு, புகை அறை முழுக்க பரவும். அந்த வாசனையில் உங்களையும் அறியாமல் ஆழ்ந்த நித்திரை வரும்.

மேலே சொன்ன எண்ணெய் வகைகளில் தலா 30 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். 1 பக்கெட் தண்ணீரில் இந்தக் கலவையிலிருந்து 5 துளிகள் விட்டுக் குளித்து விட்டுப் படுத்தாலும் சுகமான நித்திரை நிச்சயம். உஅதே எண்ணெய் கலவையை 100 மி.லி. தண்ணீரில் 50 சொட்டு என்கிற கணக்கில் கலந்து, படுக்கையறையில் ரூம் ஸ்பிரேயாக அடித்து விட்டுத் தூங்கினாலும் சுகமான தூக்கம் வரும்.

உஅடம் பிடிக்கிற சில குழந்தைகள் அத்தனை சுலபத்தில் தூங்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்த எண்ணெய் கலவையைத் தொட்டு, இரண்டு காதுகளுக்கும் பின்னாடி லேசாகத் தடவினால், 10 முதல் 15 வரை எண்ணி முடிப்பதற்குள் தூங்கச் செல்வதைப் பார்க்கலாம்.

அரோமா தெரபியின் மூலம் சாத்தியப்படுகிற இந்தத் தூக்கம் காலப் போக்கில் உங்களுக்கு நிரந்தரமான நித்திரையைக் கொடுக்கும். பக்க விளைவுகள் பற்றிய பயமில்லை. தவிர காலையில் புத்துணர்வுடன் விழிப்பதும் இதில் மட்டுமே சாத்தியம்...’’

No comments:

Post a Comment