Thursday, July 24, 2014

ஆரோக்கிய உடலுக்கு தண்ணீர் அவசியம்

 Various parts of our body which regulates the movements of their work is contained in water. These are the minerals dissolved in the   water and regulate the movement of solids, such as vitamin.
நமது உடலின் பல்வேறு பாகங்களில் அடங்கியுள்ள தண்ணீர் அவைகளின் இயக்கங்களை முறைப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது. இவை  தண்ணீரில் கரைந்துள்ள தாதுப்பொருட்கள் மற்றும் விட்டமின் போன்ற திடப்பொருட்களின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துகிறது. 

மொத்தமாக ஒரே வரியில் சொல்ல போனால் உடம்பின் செயல்பாட்டையே தண்ணீர் தான் முறையாக இயக்கிகொண்டிருக்கிறது. தண்ணீரும்  இரசாயனப்பொருட்களும் அவை அனுப்பி வைக்கின்ற அனைத்துமே மூளை இதயம், சீறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற மிக முக்கிய உறுப்புகளை  தொடக்கத்திலே சென்றடைகிறதா என்பதை உடலின் அனைத்து பாகங்களிலும் போதிய தண்ணீர் விநியோகம் உறுதி செய்யப்படுகின்றன. 

பல்வேறு உறுப்புகளில் சுரக்கின்ற ரசாயனப்பொருட்கள் உடம்பின் தூரத்து உறுப்புகளிலும் சென்று பணியாற்றுகின்றன. இந்த ரசாயனப்பொருட்களை  தாங்கள் உற்பத்தி செய்ததை ஒழுங்குபடுத்துவதுடன் தங்களைச் சூழ்ந்திருக்கும் தண்ணீரிலிருந்தும் இதனை வெளியேற்றும். 

நமது உடலில் தண்ணீரின் பங்கு பற்றி தெரிந்துகொள்வோம்.


உடலின் உட்புறத்து அவயங்களின் மேலான கோடுகளில் உள்ள ஈரப்பசையை அப்படியே நிர்வகித்து வர தண்ணீர் உதவுகின்றது. ரத்தம் மற்றும் நீணநீர் போன்ற திரவங்களின் வழக்கமான அளவு மாற்றுத்திறன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றன. உடம்பின் உஷ்ணநிலையை  சமச்சீராக்க உதவுகின்றது. 

அது உடம்பிலுள்ள சிறுநீர் வியர்வை, மற்றும் மூச்சுக்காற்று ஆகியவற்றில் காணப்படும் விஷத்தன்மை அல்லது போதை ஆகியவற்றை  வெளியேற்றிவிடும். தோலின் அமைப்பையும் அதன் செயல்பாட்டையும் சரியாக ஒழுங்குபடுத்துவதற்கு தண்ணீர் இன்றிமையாததாகும்.

உடம்பு ஒரு நாள் ஒன்றிற்கு நான்கு லிட்டர் தண்ணீரை இழக்கின்றது. எனவே இதனைச் சரிக்கட்ட குறைந்தபட்சம் இதேயளவு தண்ணீரை தினசரி நாம்  எடுத்தாக வேண்டும். போதிய அளவு தண்ணீர் உடம்பில் செலுத்தாவிட்டால் அது ஈரப்பசையில்லாது உலர்ந்து போய்விடும்.
***************************************************************************************

தண்ணீரின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்

ஆரோக்கியமாக வாழ தண்ணீர் மிக அவசியமான ஒன்று. தண்ணீரை போதுமான அளவு பருகுவதன் மூலம் நமது உடலை பல நோய்களிலிருந்து  பாதுகாத்து கொள்ளலாம். மனித உடலில் தண்ணீரின் அளவு 2/3 ஆக இருக்கிறது. தண்ணீர் மனித உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. உங்களுக்கு  தெரியுமா? உங்கள் திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகள் எவ்வளவு தண்ணீரை கொண்டு இயங்குகிறது என்று.

தசை 75% நீர் கொண்டிருக்கிறது
மூளை 90% நீர் கொண்டுள்ளது
எலும்பு 22% நீர் கொண்டுள்ளது
இரத்தம் 83% நீர் கொண்டிருக்கிறது


மனித உடலில் தண்ணீரின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாகும். தண்ணீரின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்,

தண்ணீரின் உதவியுடன் ஊட்டச்சத்து மற்றும் பிராணவாயுகளை செல்களுக்கு எடுத்துசெல்கிறது. நுரையீரலில் உள்ள காற்றை ஈரப்படுத்துகிறது.  வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. நமது உடலின் முக்கிய உறுப்பான ஆர்கனை பாதுகாக்கிறது. நல்ல ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி ஆர்கன்  உறுப்புகளுக்கு உதவுகிறது. 

உடலில் உள்ள வெப்பநிலையை முறைப்படுத்துகிறது. நச்சு பண்புகளை நீக்குகிறது. மூட்டுகளுக்கு ஈரப்பதத்தை அளித்து பாதுகாக்கிறது.நமது  உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கத்திற்கும் தலை முதல் கால் வரை தண்ணீர் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. நமது  உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இயங்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

உதாரணமாக மூளை 90% தண்ணீரை கொண்டுள்ளது உங்களின் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் சப்பை ஆகவில்லை எனில் உங்களின் மூளை  அதனது வேளைகளில் நன்றாக செயல்படமுடியாத போது உங்களுக்கு தலைவலி அல்லது ஓற்றைத் தலைவலி ஏற்படக்கூடும். அதனால் உங்களுக்கு  சோர்வு மற்றும் தலைவலி ஏற்படும் போது முதலில் தண்ணீரை குடியுங்கள். தண்ணீரின் தேவை காரணமாக்தான் தலைவலி ஏற்படுவதும் ஒரு  காரணம். தண்ணீர் குடித்த பின்பும் சரியாக வில்லையெனில் வேறு ஏதேனும் காரணமா என தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment