Thursday, July 24, 2014

தண்ணீரின் பயன்பாடு

தண்ணீரின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்

ஆரோக்கியமாக வாழ தண்ணீர் மிக அவசியமான ஒன்று. தண்ணீரை போதுமான அளவு பருகுவதன் மூலம் நமது உடலை பல நோய்களிலிருந்து  பாதுகாத்து கொள்ளலாம். மனித உடலில் தண்ணீரின் அளவு 2/3 ஆக இருக்கிறது. தண்ணீர் மனித உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. உங்களுக்கு  தெரியுமா? உங்கள் திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகள் எவ்வளவு தண்ணீரை கொண்டு இயங்குகிறது என்று.

தசை 75% நீர் கொண்டிருக்கிறது
மூளை 90% நீர் கொண்டுள்ளது
எலும்பு 22% நீர் கொண்டுள்ளது
இரத்தம் 83% நீர் கொண்டிருக்கிறது


மனித உடலில் தண்ணீரின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாகும். தண்ணீரின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்,

தண்ணீரின் உதவியுடன் ஊட்டச்சத்து மற்றும் பிராணவாயுகளை செல்களுக்கு எடுத்துசெல்கிறது. நுரையீரலில் உள்ள காற்றை ஈரப்படுத்துகிறது.  வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. நமது உடலின் முக்கிய உறுப்பான ஆர்கனை பாதுகாக்கிறது. நல்ல ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி ஆர்கன்  உறுப்புகளுக்கு உதவுகிறது. 

உடலில் உள்ள வெப்பநிலையை முறைப்படுத்துகிறது. நச்சு பண்புகளை நீக்குகிறது. மூட்டுகளுக்கு ஈரப்பதத்தை அளித்து பாதுகாக்கிறது.நமது  உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கத்திற்கும் தலை முதல் கால் வரை தண்ணீர் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. நமது  உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இயங்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

உதாரணமாக மூளை 90% தண்ணீரை கொண்டுள்ளது உங்களின் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் சப்பை ஆகவில்லை எனில் உங்களின் மூளை  அதனது வேளைகளில் நன்றாக செயல்படமுடியாத போது உங்களுக்கு தலைவலி அல்லது ஓற்றைத் தலைவலி ஏற்படக்கூடும். அதனால் உங்களுக்கு  சோர்வு மற்றும் தலைவலி ஏற்படும் போது முதலில் தண்ணீரை குடியுங்கள். தண்ணீரின் தேவை காரணமாக்தான் தலைவலி ஏற்படுவதும் ஒரு  காரணம். தண்ணீர் குடித்த பின்பும் சரியாக வில்லையெனில் வேறு ஏதேனும் காரணமா என தீர்வு காணலாம்.
*********************************************************************************************

அதிக தண்ணீர் குடித்தால் எடை குறையுமா?

அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? எப்படி? 80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5  லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே... இதனால் சிறுநீரகம் பாதிக்கப்  படாதா?

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தனின் பதில்... 

அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது. நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி,  பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை சாப்பிட்டு வந்தால் எடை குறையலாம். பொதுவாக வெயில் காலத்தில் அதிக  தண்ணீர் குடிக்க வேண்டும். 

வியர்வை வழியே உடலின் நீர் வெளியேறுவதால்,  அதை ஈடுகட்ட, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். வெயில் இல்லாத மற்ற  நாள்களில், வியர்வை அதிகமிருக்காது. உடலின் தண்ணீர்  சத்திலும் இழப்பிருக்காது. அதனால் அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரின் அளவும்  அதிகரிக்கும். அதிக தண்ணீர் குடிப்பது என்பது, ஆரோக்கியமான  சிறுநீரகங்கள் மற்றும் இதயம் கொண்டவர்களுக்கு ஓ.கே. ஒன்றும் செய்யாது. 

சிறுநீரகம் பழுதடைந்திருந்தாலோ, சுவாசப் பிரச்னை இருந்தாலோ,  கல்லீரல் அல்லது இதயக்கோளாறு இருந்தாலோ, அதிகளவு தண்ணீரானது  உடலுக்குள்ளேயே தங்கி, வெளியேற்ற முடியாமல் போகும். அந்த  நிலையை ‘ஃப்ளூயிட் ஓவர் லோடு’ என்கிறோம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள்  நாளொன்றுக்கு ஒன்றரை முதல் 2 லிட்டர் வரையிலும், இதயக்  கோளாறு இருப்பவர்கள் 1 லிட்டரும் மட்டுமே தண்ணீர் குடிக்க  அனுமதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் மட்டும் குடிக்கிற தண்ணீரின் அளவில் கவனம் செலுத்தினால் போதும்.
*********************************************************************************************

உலகை வாழ வைக்கும் அமிர்தம், தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்

Today is World Water Day. 'The world can be dry,' Come to the New Century. 'Water is the elikcar of Life' is. I mean, the world, the world will live lives like Amirtham water
இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. 

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

நம் செல்களில் 2 சதவீதம் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டால் உடலின் ஆற்றலில் 20 சதவீதம் குறைபாடாகும். நமது மொத்த எடையில் 70 சதவீதம் தண்ணீர். வயது பாலினம் மற்றும் எடை அடிப்படையில் உடலில் நீரின் அளவில் வேறுபாடு நிலவும். நுரையீரலில் 90 ரத்தத்தில், 83 மூளை - தசையில் 75, எலும்பில் 22 சதவிகிதம் தண்ணீர்தான்.

அதுவே 65- 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது. மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். 

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான். 

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

No comments:

Post a Comment