Thursday, July 24, 2014

அழகு சேர்க்கும் கண்ணாடிகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது அவசியம்

The need for frequent cleaning glasses will add beauty
வீட்டின் உள் அலங்காரத்தில் மரங்களும், கண்ணாடிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அலமாரிகள், ஷோகேஸ்கள், டிரஸ்ஸிங் டேபிள், ஜன்னல்கள்  போன்ற இடங்களில் மரங்கள் மற்றும் கண்ணாடிகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. மரங்களை கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகள்  செய்தாலும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் கண்ணாடிகளை கொண்டு அலங்கரிப்பதால் கிடைக்கின்ற அழகு ஈடு  செய்ய முடியாததாக உள்ளது.

மேலும் கண்ணாடிகளில் வரையப்படும் ஓவியங்கள் கொள்ளை அழகு கொண்டவை. கண்ணாடிகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று  விரும்புபவர்கள் அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு இருப்பது இல்லை. வீடுகளில் தூசி படிவது என்பது  இயற்கையான ஒன்று. அந்த தூசிகளை அகற்றுவதற்காக அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்கின்றோம். ஆனால் கண்ணாடிகளை அடிக்கடி சுத்தம்  செய்வது கிடையாது. கண்ணாடிகளில் தூசி படியும் போது அதன் அழகு அப்படியே கெட்டுவிடும்.

கண்ணாடிகளில் தூசிபடிவதை எக்காரணம் கொண்டும் தடுக்கமுடியாது. ஆனால் அடிக்கடி சுத்தம் செய்வது என்பது சாத்தியமான ஒன்று. சுத்தமான  மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடி சுத்தமாகிவிடும் என்பது பொதுவான ஆலோசனையாக உள்ளது. ஆனால்,  தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றோம். கண்ணாடியில் படிந்திருக்கும் கறைகளை முற்றிலும் போக்குவதற்கு ஒரு சில  பொருட்களை பயன்படுத்தினால் நிச்சயம் பளிச்சென்று மின்னும். 

ஈரமான துணியை கொண்டு துடைத்துவிட்டு அதன்பின் காய்ந்த துணியால் துடைத்தால் கண்ணாடி சுத்தமாகிவிடும். கண்ணாடிகள் மீது சிறிது  தண்ணீரை தெளித்து காகிதம் கொண்டு அழுத்தி துடைக்கலாம். இவ்வாறு அழுத்தி துடைத்த பிறகும் கண்ணாடி சுத்தமாகாவிட்டாலோ அல்லது  கறைகள் இருந்தாலோ வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது வெள்ளை வினிகரை கலந்து கண்ணாடியின் மீது தெளித்து துணியை கொண்டு  துடைத்தால் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

இதே போல தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து லேசாக கண்ணாடிகளின் மீது தெளித்து துணியை கொண்டு துடைத்தால் கண்ணாடிகள்  பளிச்சென்று மாறிவிடும். இது சாதாரண கண்ணாடிகளை சுத்தப்படுத்தும் போது கையாளும் வழிமுறைகளாகும். ஆனால் வீட்டில் ஹால், போர்டிகோ  போன்ற பகுதிகளில் கண்ணாடிகளினால் ஆன அலங்கார விளக்குகளை சுத்தப்படுத்தும் போது கவனமாக கையாள வேண்டும். அலங்கார  விளக்குகளில் படியும் தூசி மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்துவது என்பது சற்று கடினமானதாக இருக்கும். 

எனவே அலங்கார விளக்குகளில் தூசிகள் படியாதவாறு அடிக்கடி சுத்தப்படுத்துவது தான் எளிமையான முறையாகும். கண்ணாடிகளை சுத்தப்படுத்தும்  போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக கைவிரல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அலங்கார  விளக்குகளில் படியும் தூசி மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்துவது என்பது சற்று கடினமானதாக இருக்கும். எனவே அலங்கார விளக்குகளில் தூசிகள்  படியாதவாறு அடிக்கடி சுத்தப்படுத்துவது தான் எளிமையான முறையாகும்.

கண்ணாடிகளில் தூசிபடிவதை எக்காரணம் கொண்டும் தடுக்கமுடியாது. ஆனால் அடிக்கடி சுத்தம் செய்வது என்பது சாத்தியமான ஒன்று. சுத்தமான  மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடி சுத்தமாகிவிடும் என்பது பொதுவான ஆலோசனையாக உள்ளது.

No comments:

Post a Comment