Saturday, October 25, 2014

இதம் வரும் வண்ணம்

எவ்வளவுதான் செலவுசெய்து வீட்டைக் கட்டினாலும் உணமையில் வீட்டுக்கு அழகுசேர்ப்பவை வண்ணங்கள்தான். சரியான வண்ணத்தைத் தேர்வுசெய்தாலேயே பாதி வேலை முடிந்த மாதிரிதான்.
பெயிண்டைத் தேர்ந்தெடுக்கும்போது எந்த அறைக்கு எவ்விதமான வண்ணங்களை உபயோகிப்பது என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். அதுபோல உள்புற, வெளிப்புற சுவருக்கு ஏற்றார்போல் பெயிண்டையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உள்புற சுவருக்கு எமால்ஷன் அல்லது டிஸ்டம்பர் பெயிண்டுகளைத் தேர்வுசெய்தால் பொருத்தமாக இருக்கும். இவ்வகை பெயிண்டுகள் உள்புறச் சுவருக்கு அழகும் வலிமையும் சேர்ப்பவை. அழுக்குப் படிந்தால் எளிதாகத் துடைக்கவும் முடியும்.
வெளிப்புறச் சுவருக்கு மழை, வெயிலைத் தாங்கும் வலுக்கொண்ட பெயிண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது சந்தையில் வெளிப்புறச் சுவர்களில் பயன்படுத்துவதற்கெனத் தனியான பெயிண்டுகள் விற்பனையாகின்றன.
சுவரில் ஈரப்பதத்தைப் படியவிடாத பெயிண்டுகளாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுபோல சுவரில் சிறிய பூஞ்சைகள், காளான்கள் முளைக்காத வண்ணம் பெயிண்டுடன் தேவையான அளவு பூச்சிவிரட்டி மருந்துகளைக் கலந்துகொள்ளலாம். கதவு, ஜன்னல்களுக்கும் எனாமல் பெயிண்டுகளைப் பயன்படுத்தலாம்.
வண்ணங்களைப் பொறுத்தவரை வரவேற்பு அறைக்கு கொஞ்சம் வெளிர் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். சமையல் அறைக்கு அடர் வண்ணங்களே பொருத்தமாக இருக்கும். படுக்கை அறைக்கு இதமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

No comments:

Post a Comment