வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது பலருக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். அது பணத் தேவை. செலவு அதிகரித்துவிட்டது. இன்னும் இவ்வளவு பணம் தேவை, செலவை இழுத்து விட்டுவிட்டார்கள் என்று வீடு கட்டுவோர் புலம்புவார்கள். வீடு கட்டுவதற்கெனச் செலவினங்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அடிப்படைச் செலவு, அத்தியாவசியச் செலவு, எதிர்பாராத செலவு ஆகியவையே அவை. ஒவ்வொரு செலவும் எதில் அடங்கும் என்பதைப் பொறுத்து வீடு கட்டும் செலவை ஓரளவுக்குத் துல்லியமாக நாம் முடிவு செய்ய இந்தச் செலவினங்களைத் தெரிந்து கொள்வதும் முக்கியம்.
அடிப்படைச் செலவு
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வதைப் போல, வீடு கட்ட முக்கியத் தேவை, மனை. இதை வாங்க ஆகும் செலவு மிக முக்கியமானது. அடுத்ததாக, வீடு கட்டத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்வது. ஆவணங்கள் பதிவு, குடி நீர், மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, திட்ட அனுமதி வாங்குவது ஆகியவற்றுக்கு ஆகும் செலவு ஆகியவை அடிப்படைச் செலவிலேயே வரும். இச்செலவுகளைப் பற்றி அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்டுச் சிக்கனமாகச் செலவழிக்க முயற்சிக்கவேண்டும். இது தவிர நமக்கு ஏற்படும் செலவுகளில் அடிப்படைச் செலவு எது, தவிர்க்க முடிகிற செலவு எது என்பதைப் பிரித்துப் பார்க்கக்கூடிய திறமை நமக்கு இருந்தால் செலவினங்கள் நம் கட்டுக்குள் இருக்கும்.
வழிகாட்டி

அத்தியாவசியச் செலவு
அடிப்படைச் செலவிற்கும், அத்தியாவசியச் செலவிற்கும் வேறுபாடு உண்டு. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளித்தல், மின்சாரச் செலவு, கட்டுமானப் பொருட்களை எடுத்து வரும் போக்குவரத்துச் செலவு ஆகியவையெல்லாம் அத்தியாவசியச் செலவின் கீழ் வரும். இந்தச் செலவினங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் போடும் திட்டச் செலவை விடச் சில சமயங்களில் இந்தச் செலவினம் அதிகமாகிவிடும். சில நேரங்களில் வீடு கட்டுபவர்களுக்குப் பண நெருக்கடியை ஏற்படுத்தும் செலவினம் இது.
எதிர்பாராத செலவு
வீடு கட்ட முறையாகத் திட்டம் போட்டுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும். அப்போது நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் எனப் புதிய யோசனையைப் பொறியாளரிடம் சொல்வார்கள். இன்னும் சில வீட்டில் உறுப்பினர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று புதிய யோசனையைச் செய்து முடிக்க வற்புறுத்துவார்கள். கூடுதல் செலவு ஆகும் என்றாலும், இப்போது விட்டால் எப்போது செய்து முடிப்பது என்று யோசனையை நிறைவேற்ற ஆயத்தமாக்கி விடுவார்கள். இது எதிர்பாராத செலவு கணக்கில் வரும். ஆனால், கடைசி நேரத்தில் திட்டத்தில் மாற்றம் செய்து செய்யப்படும் பணிகளுக்கு மதிப்பிடப்படும் தொகையை விட மேலும் கூடுதல் செலவு ஆகவும் வாய்ப்புகள் உண்டு. இதேபோலக் கட்டுமானப் பொருட்களின் திடீரென ஏற்படும் விலை உயர்வும் எதிர்பாராத செலவைச் சாரும்.

எல்லாச் செலவுகளுக்கும் எப்போதும் ஒரு விஷயம் தீர்வாகவும் அமைந்திருக்கிறது. அதுதான் சிக்கனம். எல்லாச் செலவுகளிலும் ஓரளவு சிக்கனத்தைக் கடைபிடிக்க முயற்சித்தால், கட்டுமானச் செலவு எகிறாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். பணத் தேவை இல்லாமல் வீட்டுக் கட்டுமானத்தை மேற்கொள்ளவும் முடியும்.