Monday, November 24, 2025

ICWA = CA = ACCA = CFA = CPA = *Almost all are equal professional


.              ICWA = CA = ACCA = CFA = CPA  = 
*Almost  all  are  equal  professional  qualifications*

இந்த பதிவை  எனது *இஸ்லாமிய வீட்டு  தம்பிகளுக்காக எழுதுகிறேன் "  
              அரபு  நாட்டில்  பல  ஆண்டுகளாக   எடுபிடியாக  வேலை  செய்து  சொற்ப  சம்பளத்தில்  பல  வருடங்களை  அரபு  நாட்டில்  தொலைத்து  புலம்பும்   அப்பாவிகளுக்கும்  அவர்களின்  பிள்ளைகளுக்கு இந்த தகவல்  உதவலாம்.
மேலே  குறிப்பிட்டுள்ள...., 

ICWA  = *institute of cost and works accountant*

CA  = *Chartered  Accountant* 

CPA = *Certififed  Public  Accountant*

ACCA  = *Association of the certifeied chartered Accountants*

CFA  =  *Chartered  Financial Analyst*

இவை   அனைத்தும்   உலகம்  முழுவதும்  அங்கீகாரம்  பெற்ற   அகவுண்டண்டு  ஆகுவதற்கு   உள்ள  கல்வி  தகுதி  
       இதனை   படிக்க   குறைந்த  பட்சம்   +2   12ம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்  போதும்  ஓரளவு   ஆங்கிலம்  நன்றாக  எழுத  படிக்க  புரிந்து  கொள்ள  தெரிந்தால்  போதும்.
+2 பாடத்தில்    அகவுண்டன்ஸி   அல்லது  காமர்ஸ்  பாடம்  படித்திருந்தால்  சற்று  எளிதாக  இருக்கும்   அதுவும்  அவசியம்  இல்லை.  
                  மேற்  சொன்ன  கல்வியை  // தேர்வுகளை  எழுதி  தேர்ச்சி  பெற  எந்த  பெரிய  கல்லூரியிலும்   பல  லட்சம்  கட்டி படிக்க  வேண்டிய  அவசியம்  கிடையாது.  
            பயிற்சி  மையங்களில்  சேர்ந்தும்   அல்லது சார்டர்ட்  அகவுண்டண்டாக  பணி  செய்பவர்களிடம்   முழு நேரம் // பகுதி  நேரமாக  வேலை  செய்து கொண்டே   இந்த  தேர்வுகளை  எழுதலாம்.  
             ஏதாவது ஒரு  பட்டபடிப்பு  அல்லது   BCom  BBA   MCom  BA  BSc  MBA   எந்த  பட்டபடிப்பு  படிப்பு   படித்திருந்தாலும்   அதற்க்கு  தகுந்தாற்போல    தேர்வுகளில்  சில   பாடங்களுக்கு   விலக்கும் அளிப்பார்கள் (exemption  for  few subjects )
         இந்த அகவுண்டன்ஸி கழகங்களால்  நடத்தப்படும்  தேர்வுகள்   தனிபட்ட   நிபுணத்துவ  தேர்வுகள் (Private  Professional examination )  மத்திய  மாநில  அரசுகளாலும்  உலகின்  பல  நாடுகளில்  அங்கீகாரம்  பெற்ற  தேர்வுகள்  இவை 

இதனை  
*Entrance Level exam*   = நுழைவு  தேர்வு
*Premilinary  Level  exam* = அடிப்படை  நிலை  தேர்வு  
*intermediate  Level  exam* =  நடு நிலை  தேர்வு 
*Advance Level  exam* =  உயர் நிலை  தேர்வு 
           என்று 4 பகுதிகளாக இந்த தேர்வை  எழுதி  தேர்ச்சி   பெற்று  பிறகு  சில வருடங்கள்  கணக்காய்வாளராக  ( Auditor trainee )  பணி  செய்து  பிறகு   உங்களை   பட்டய கணக்காய்வாராக ( Charterd Accountant )  ஆக  பதிவு  செய்து   கொண்டு   வாழ்நாள்  முழுவதும்   உலகில்  எந்த  நாட்டிலும்   சார்டட்  அக்கவுண்டண்டாக   பணி  செய்யலாம்  , பைனான்ஸியல்  கண்ட்ரோலராக  ,  ஆடிட்டராக   எல்லா   நிருவனங்களிலும் பணி செய்யலாம்.
கை  நிறைய  சம்பாதிக்கலாம்   
*ஆர்வமும்   விடா  முயற்சியும்  தான்   மிக  அவசியம்*  
          இந்த தேர்வுகள் சற்று கடினம் தான்  ஆனால்   உலக  அங்கீகாரம்  பெற்றவை அதனால் தான்  கடினமாக  தேர்வு  வைத்து   திறமையாளர்களை உருவாக்குகிறார்கள்.
       இப்படி ஏதாவது உருப்படியாக படித்து   வளமாக வாழ்வை அமைத்து   கொள்ளுங்கள்.உங்கள்சந்ததிகளையும் சிறந்த கல்வியாளராக மாற்றுங்கள்.

பயன்படுத்த...!
                               ✍️ மதுரை.,இஸ்மாயில்

No comments:

Post a Comment