Wednesday, November 19, 2025

பொரியல்


🦋🦋கேரட் பொரியல் !!
🔴தேவையான பொருட்கள்

✍️4 கேரட்
✍️1பெரிய வெங்காயம்
✍️1கைபிடி அளவு தேங்காய் துருவல்
✍️3 பச்சை மிளகாய் 
✍️சிறிதளவு கடுகு உளுந்தம்பருப்பு
✍️கறிவேப்பிலை
✍️உப்பு 

🔴கேரட்டை துருவி எடுத்துக்கொள்ளவும், கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு தாளிக்கவும்

🔴பின்பு அதனுடன் துருவிய கேரட்டை சேர்த்து கிளறவும், சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும், அதன் மேல் தண்ணீர் தெளித்து கிளறி ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும், சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து கிளறி விடவும்

🔴கேரட் நன்கு வெந்த பிறகு தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும், இப்போது சுவையான கேரட் பொரியல் ரெடி

🦋🦋பீட்ரூட் பொரியல்!!

🔴தேவையான பொருட்கள்
✍️2 பீட்ரூட்
✍️1 வெங்காயம்
✍️2 ஸ்பூன் எண்ணெய்
✍️கடுகு, கருவேப்பிலை
✍️3 காய்ந்த மிளகாய்
✍️1 ஸ்பூன் கடலை பருப்பு
✍️1/4 கப் தேங்காய் துருவல்
✍️உப்பு

🔴 கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை கடலை பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

🔴வெங்காயத்தை பொடியாக நறுக்கி தாளிப்பில் சேர்த்து வதக்கவும்.

🔴பீட்ரூட்டை நன்றாக துருவி வெங்காயத்துடன் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு தீயை குறைத்து பீட்ரூட் வெந்தபின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும் சுவையான பீட்ரூட் பொரியல் தயார்

🦋🦋புடலங்காய் முட்டை பொரியல்!!

🔴தேவையான பொருட்கள்
✍️300 கிராம் புடலங்காய்
✍️1/4 கப் எண்ணெய்
✍️2 முட்டை
✍️2 பச்சை மிளகாய்
✍️கடுகு,கருவேப்பிலை
✍️1 ஸ்பூன் கடலை பருப்பு
✍️1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
✍️1/4 தேக்கரண்டி மிளகுத்தூள்
✍️2 வெங்காயம்

🔴 கடாயில் எண்ணெய் சேர்க்கவும். இதில் கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் ‌

🔴புடலங்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய் வேக விடவும் ‌

🔴காய் வெந்ததும் மஞ்சள் தூள் உப்பு முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

🦋🦋கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் !!

🔴தேவையான பொருட்கள் : 
✍️2கப் நறுக்கிய முட்டை கோஸ்
✍️1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
✍️1ஸ்பூன் கடுகு
✍️1கொத்து கறிவேப்பிலை
✍️1பெரிய வெங்காயம்
✍️2பச்சை மிளகாய்
✍️1/4கப் கேரட், பட்டாணி கலந்தது
✍️1/4கப் தேங்காய்
✍️4,5சாம்பார் வெங்காயம்
✍️1/2ஸ்பூன் சீரகம்
✍️தேவையானஅளவு உப்பு
✍️1/4கப் வேகவைத்த பாசிப்பருப்பு

🔴முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

🔴அது வதங்கியதும் அதனுடன் கோஸையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அதனுடன் கேரட், பட்டாணி சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்..

🔴மிக்ஸி ஜாரில் தேங்காய் சின்ன வெங்காயம் சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. கோஸ் வெந்ததும் அதனுடன் அரைத்துள்ள தேங்காயையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்து விடவும்.. இறுதியாக பாசிப்பருப்பையும் சேர்த்து கலந்து விடவும்

🔴அடுப்பை அணைத்துவிட்டு இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைக்கவும்.. விருப்பப்பட்டால் இறுதியாக ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றினால் மிகவும் அருமையாக இருக்கும்..

🔴இப்போது சூடான சுவையான அருமையான கல்யாண வீட்டு முட்டை கோஸ் பொரியல் தயார்..

🦋🦋உருளைக்கிழங்கு பொரியல் !!

🔴தேவையான பொருட்கள்
✍️3 உருளைக்கிழங்கு
✍️அரை ஸ்பூன் கடுகு உளுந்து
✍️4 டீஸ்பூன்எண்ணெய்
✍️1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
✍️1 தேக்கரண்டி சாம்பார் பொடி 
✍️5 பூண்டு பற்கள்
✍️தேவைக்கேற்பஉப்பு
✍️சிறிதளவுகருவேப்பிலை

🔴முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்

🔴ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் பூண்டு நசுக்கியது கருவேப்பிலை சேர்க்கவும்

🔴பூண்டு எண்ணெய்யில் சிவந்ததும் உருளைக்கிழங்கை மிளகாய்த்தூள் சாம்பார் பொடி சேர்ப்பதால் சுவை கூடும் பின் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்

🔴மிதமான தீயில் பத்து நிமிடங்கள் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும் நன்கு வெந்ததும் இறக்கி விடலாம் .

🦋🦋சிம்பிள் முட்டைகோஸ் பொரியல் !! 

தேவையான பொருட்கள் : 
✍️2கப் நறுக்கிய முட்டை கோஸ்
✍️1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
✍️1ஸ்பூன் கடுகு
✍️1கொத்து கறிவேப்பிலை
✍️1பெரிய வெங்காயம்
✍️2பச்சை மிளகாய்
✍️1/4கப் தேங்காய்
✍️தேவையானஅளவு உப்பு

🔴முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

🔴அது வதங்கியதும் அதனுடன் கோஸையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும் 

🔴கோஸ் வெந்ததும் அதனுடன் துருவிய தேங்காய் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்து விடவும்..

🔴அடுப்பை அணைத்துவிட்டு இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைக்கவும்.. விருப்பப்பட்டால் இறுதியாக ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றினால் மிகவும் அருமையாக இருக்கும்..

🦋🦋அவரக்காய் பொரியல்!!

✍️தேவையான பொருட்கள்

✍️200 கிராம்அவரைக்காய்
✍️ஒன்றுபெரிய வெங்காயம்
✍️1தக்காளி
✍️2 ஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்
✍️தாளிக்ககடுகு உளுத்தம்பருப்பு
✍️எண்ணெய் 

🔴வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும். வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

🔴அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வானலியில் அவரைக்காயை உப்புடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

🔴குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து அவரைக்காயை ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.

🔴அவரைக்காய் வெந்த உடன் மிதமான தீயில் சுருள வதக்கவும். அவரைக்காய் பொரியல் தயார்.

🦋🦋சுண்டக்காய் பொரியல் !!

✅ தேவையான பொருட்கள்:

✍️ சுண்டக்காய் – 1 கப்
✍️ சிறிய வெங்காயம் – 10 (அல்லது பெரிய வெங்காயம் – 1)
✍️ பச்சை மிளகாய் – 2
✍️ வத்தல மிளகாய் – 2
✍️ கடுகு – 1/2 டீஸ்பூன்
✍️ உளுந்து பருப்பு – 1/2 டீஸ்பூன்
✍️ சீரகம் – 1/2 டீஸ்பூன்
✍️ கறிவேப்பிலை – சிறிதளவு
✍️ மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
✍️ மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
✍️ உப்பு – தேவையான அளவு
✍️ எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

✅ செய்வது எப்படி:

✍️ முதலில் சுண்டக்கையை நன்றாக கழுவி, ஒவ்வொன்றையும் நடுவில் பிளந்து (அல்லது மிதமாக அரைத்து) வைத்துக்கொள்ளவும்.
✍️ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுண்டக்கையை விட்டு, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
✍️ வெந்த பிறகு நீர் வடிகட்டி வைக்கவும்.

✍️ ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து, வத்தல் மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சுக்கு பொடி சேர்த்து வதக்கவும்.
✍️ பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
✍️ வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த சுண்டக்கையை சேர்க்கவும்.

✍️ அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
✍️ சிறிய தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும், சுண்டக்காயை நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைக்கவும் 

🦋🦋வாழைத்தண்டு பொரியல்!!

✍️தேவையான பொருட்கள்
✍️200 கிராம் வாழைத்தண்டு
✍️2 பெரிய வெங்காயம்
✍️1/2 தேக்கரண்டி கடுகு
✍️1 தேக்கரண்டி சீரகம்
✍️2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
✍️2 காய்ந்த மிளகாய்
✍️1 கொத்து கறிவேப்பிலை
✍️1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
✍️தேவையானஅளவு உப்பு
✍️1/4 கப் தேங்காய் துருவல்

🔴வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி மோர் தண்ணீரில் ஊற வைக்கவும். இப்படி செய்வதனால் தண்டு சமைக்கும் வரை கருத்துப் போகாமல் இருக்கும்

🔴ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும் இதில் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு அறிந்த வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

🔴அதில் வெட்டி வைத்துள்ள வாழைத்தண்டு சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

🔴தண்டு வெந்த பின் துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து கொரகொரப்பாக பொடித்து இறுதியாக சேர்த்து கலந்து இறக்கவும்.

🦋🦋பாகற்காய் பொறியல் செய்முறை (Pavakkai Poriyal Recipe in Tamil)

தேவையான பொருட்கள்:

✍️ பாகற்காய் – 2 (நன்கு துண்டுகளாக நறுக்கவும்)
✍️ வெங்காயம் – 1 (நறுக்கியது)
✍️ பூண்டு – 4 பல்லி (நறுக்கியது)
✍️ மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
✍️ மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
✍️ உப்பு – தேவையான அளவு
✍️ தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
✍️ எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
✍️ கடுகு – 1/2 டீஸ்பூன்
✍️ உளுந்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
✍️ கருவேப்பிலை – சில தழைகள்


செய்முறை:

✍️ முதலில் பாகற்காயை வட்டமாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்கவும். பிறகு நன்றாக பிழிந்து கசப்பை குறைக்கவும்.

✍️ காய்ந்த கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.

✍️ பிறகு கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

✍️ இப்போது பிழிந்த பாகற்காய் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

✍️ மிதமான தீயில் மூடி வைத்து 10–12 நிமிடம் வதக்கவும். இடையில் கிளறி, பாகற்காய் நன்கு வெந்து வறுத்து வரும் வரை வைக்கவும்.

✍️ கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, சிறிது நேரம் வதக்கி அடுப்பில் இருந்து எடுக்கவும்.

🦋🦋🦋இது போன்ற சுவையான ரெசிபிகளை தினமும் தெரிந்து கொள்ள எனது பக்கத்தினை ஃபாலோ செய்யவும் நன்றி 🙏

No comments:

Post a Comment