Wednesday, November 19, 2025

கல்யாண வீட்டு ஊறுகாய்


கல்யாண வீட்டு ஊறுகாய் 

தேவையான பொருட்கள்

✨ 1 கிளிமூக்கு மாங்காய்(செங்காய்)
✨ 2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
✨ 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள்
✨ 1 ஸ்பூன் வெந்தயம்
✨ 1 ஸ்பூன் கடுகு
✨ ருசிக்கு உப்பு

தாளிக்க

✨ 1 டீ ஸ்பூன் கடுகு
✨ கருவேப்பிலை
✨ 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் எண்ணெய்
✨ 2 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்

செய்முறை 

1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

2. பெரிய பௌலில் மாங்காயை சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பிறகு அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

4. அடுப்பை சிறு தீயில் வைத்து வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை போட்டு கருகாமல் நன்கு, சிவக்க வறுத்து ஆற விடவும்.

5. ஆறினதும், சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.

6. அடுப்பை சிறு தீயில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும்.பொரிந்ததும், ம.தூள் போடவும்.

7. சூடான எண்ணெயிலேயே, காஷ்மீரி மி.தூள், போடவும்.அடுத்து பெருங்காயத் தூள் சேர்க்கவும்.

8. கடைசியாக கருவேப்பிலை பொரிந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

9. மாங்காயுடன், வறுத்து அரைத்த பொடியை சேர்த்து,அதனுடன், தாளித்ததைக், கொட்டவும்.

10. பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

11. இப்போது, சுவையான, சுலபமான, கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் தயார்.செய்து அசத்தவும்.



#mango #rawmango #pickle #rawmangopickle #instafood #instantrecipes #madhampattyrangaraj #tamilfoodie #tamiltrending #tamilreels #trending
#mangorecipe #tamiltrendingmemes #summerrecipes #summer #summertime #veganrecipes #easyrecipes #postviralシ #post #fbpost #viralpost #cookingtips

No comments:

Post a Comment